• Login
Monday, October 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஒரே நொடி.. நேராக வந்து தாக்கிய ஏவுகணை.. கதறி ஓடிய பணிகள்.. திக்திக் சவுதி ஏர்போர்ட் தாக்குதல் | Riyadh Airport Attack: Houthi Strike Video Shows Passengers Fleeing, Flights Suspended

GenevaTimes by GenevaTimes
October 12, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஒரே நொடி.. நேராக வந்து தாக்கிய ஏவுகணை.. கதறி ஓடிய பணிகள்.. திக்திக் சவுதி ஏர்போர்ட் தாக்குதல் | Riyadh Airport Attack: Houthi Strike Video Shows Passengers Fleeing, Flights Suspended
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Vigneshkumar

Time
Published: Monday, October 12, 2026, 12:09 [IST]

ரியாத்: சவுதி அரேபியாவின் ரியாத் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பயணிகள் முனையத்தின் மீது ஹவுதி அமைப்பு மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. ஏமனை சேர்ந்த இந்த அமைப்பு நடத்திய தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில், விமான சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் இப்போது பதற்றம் உச்சத்தில் இருக்கிறது. ஈரான் போர் ஒரு பக்கம் தொடரும் நிலையில், மற்ற மத்திய கிழக்கு நாடுகள் மீதான தாக்குதல்களும் தொடர்ந்து வருகிறது. மத்திய கிழக்கின் சவுதியில் ஈரான் ஆதரவு பெற்ற ஏமனில் உள்ள ஹவுதி படை தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் சவுதியிலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

Riyadh Airport Attack Houthi Airport

தாக்குதல்

இதற்கிடையே சவுதி அரேபியாவின் ரியாத் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பயணிகள் முனையத்தின் மீது ஹவுதி அமைப்பு மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. ஏமனை சேர்ந்த இந்த அமைப்பு கடந்த சில காலமாகவே சவுதியை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதன்படியே இந்த தாக்குதலும் நடந்துள்ளது. முந்தைய நாள் ஹவுதி நடத்திய தாக்குதலில் இந்தியர் உட்பட 13 பேர் கொல்லப்பட்ட நிலையில், மறுநாளே இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. புதிய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 11 பேர் காயமடைந்துள்ளனர்.

தற்காலிகமாக நிறுத்தம்

கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் 4வது முனையத்தில் அடையாளம் தெரியாத ஏவுகணை தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்டதாக சவுதி விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே விமான நிலையத்துக்கு அருகே வந்த க்ரூஸ் ஏவுகணையையும் சவுதி வான் பாதுகாப்புப் படையினர் இடைமறித்துத் தடுத்துள்ளனர். அடுத்தடுத்து நடத்தப்பட்ட தாக்குதல்களை தொடர்ந்து, ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. விமான சேவையும் தற்காலிகமாக முடங்கியது.

கடந்த ஐந்து நாட்களில் மட்டும் ரியாத் விமான நிலையம் நான்கு முறை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் சவுதி மண்ணில் நிகழ்ந்த மிக மோசமான தாக்குதலாக இது இருக்கிறது.

வீடியோ

இந்த தாக்குதலின்போது விமான நிலையத்தில் இருந்த பயணிகள் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடும் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன. விமானங்களில் ஏறுவதற்காக காத்திருந்த உம்ரா புனித பயணிகள் உள்ளிட்ட பலர், திடீர் தாக்குதலால் அதிர்ச்சியடைந்தனர். விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகளுக்கு அருகே ஆரஞ்சு நிறத்தில் பிரகாசமான ஒளியுடன் வெடிப்பு ஏற்படுவது தெரிகிறது. இதையடுத்து பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓடுகின்றனர். விமான நிலையக் கூரையின் சில பகுதிகள் இடிந்து விழுவது போன்ற காட்சிகளும் பதிவாகியுள்ளன.

Dramatic footage of the moment yesterday’s Houthi attack struck King Khalid International Airport in Riyadh, including Umrah pilgrims preparing to board their flights before the strike. https://t.co/KWJ3fQiTpW

— Aditya Raj Kaul (@AdityaRajKaul) October 11, 2026

பின்னணி

ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்பு, கடந்த 24 மணி நேரத்தில் கிழக்கு சவுதியில் உள்ள தம்மாம் விமான நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளது. சவுதி அரேபியாவின் முக்கிய போக்குவரத்து மையங்களை தொடர்ந்து குறிவைப்போம் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. சவுதியின் போக்குவரத்து மையங்களை குறிவைப்பதில் ஹவுதிகள் திட்டவட்டமாக உள்ளது.

தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சவுதி விமான நிலையங்களுக்கான சேவைகளை பல விமான நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. மேலும், சவுதியில் உள்ள இந்தியா உள்ளிட்ட சில நாடுகளின் தூதரகங்கள் தங்கள் நாட்டு குடிமகன்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

English summary

Yemen’s Houthi group has reportedly launched another attack targeting the passenger terminal at(சவுதியில் விமான தாக்குதல்): King Khalid International Airport Riyadh Airport Attack latest news in tamil.

Read More

Previous Post

பாடசாலைகளில் கத்திக்குத்து சம்பவங்கள்: போலந்து முழுவதும் 20,000 பொலிஸார் விசேட பாதுகாப்பு நடவடிக்கை – Sri Lanka Tamil News

Next Post

நாடு தழுவிய சுற்றிவளைப்பு: 327  தலைக்கவசங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் – Sri Lanka Tamil News

Next Post
நாடு தழுவிய சுற்றிவளைப்பு: 327  தலைக்கவசங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் – Sri Lanka Tamil News

நாடு தழுவிய சுற்றிவளைப்பு: 327  தலைக்கவசங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin