• Login
Monday, October 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கல்முனை வைத்தியசாலை பணிப்பாளர் வழக்கு: அர்ச்சுனா உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றின் உத்தரவு

GenevaTimes by GenevaTimes
October 12, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கல்முனை வைத்தியசாலை பணிப்பாளர் வழக்கு: அர்ச்சுனா உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றின் உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணனுக்கு எதிராக முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அவதூறான பதிவுகளை வெளியிட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பான வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட மூவரை எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ், வைத்தியர் சுகுணனால் கடந்த செப்டெம்பர் 21ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.


நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஹரீஸ், மௌலவி முஹமத் மிப்லால், உமர் லெப்பை மப்ரூப், அஹமட் லெப்பை முகமது முத்தார் மற்றும் முகமது இப்ராஹிம் ஆகிய ஆறு பேருக்கு எதிராகவும், தொடர்புடைய சமூக வலைத்தளத் தளங்களுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணிகள் குழு 


இதனைத் தொடர்ந்து, குறித்த ஆறு பேரும் வைத்தியர் சுகுணனுக்கு எதிராக முகநூல் மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிடுவதற்குத் தடை விதித்து கடந்த செப்டெம்பர் 28ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

கல்முனை வைத்தியசாலை பணிப்பாளர் வழக்கு: அர்ச்சுனா உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றின் உத்தரவு | Mp Aruchuna And Two Others By The Batticaloa Court

 இந்நிலையில், இன்று திங்கட்கிழமை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். ஹரீஸ், மௌலவி முஹமத் மிப்லால் மற்றும் உமர் லெப்பை மப்ரூப் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கியாஸ் ஹிஸ்புல்லா தலைமையிலான சட்டத்தரணிகள் குழு முன்னிலையானது.


இந்த வழக்கை விசாரித்து உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இல்லை எனவும், காரணம் காட்டுவதற்கான விடயங்கள் தொடர்பிலும் அவர்கள் மன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.



வழக்காளியான வைத்தியர் சுகுணன் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி லக்சான் டயஸ் மற்றும் சட்டத்தரணி கனகலிங்கம் கிசோபனா ஆகியோர் முன்னிலையாகி சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.


இதனையடுத்து, நீதிமன்றில் முன்னிலையாகாத நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, அஹமட் லெப்பை முகமது முத்தார் மற்றும் முகமது இப்ராஹிம் ஆகிய மூவரையும் எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பதில் நீதவான் வை. விஜயகுமார் உத்தரவிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

அன்வாரின் பட்ஜெட் 2027 – ஆகாயம் தொட்டு ஆணிவேர் வரை – Malaysiakini

Next Post

2026 பொருளாதாரத்திற்கான நோபல் அறிவிப்பு.. ராபர்ட் இ. ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டுக்கு விருது! | Nobel Prize in Economics 2026: Robert E. Hall and Michael Woodford Announced as Winners

Next Post
2026 பொருளாதாரத்திற்கான நோபல் அறிவிப்பு.. ராபர்ட் இ. ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டுக்கு விருது! | Nobel Prize in Economics 2026: Robert E. Hall and Michael Woodford Announced as Winners

2026 பொருளாதாரத்திற்கான நோபல் அறிவிப்பு.. ராபர்ட் இ. ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டுக்கு விருது! | Nobel Prize in Economics 2026: Robert E. Hall and Michael Woodford Announced as Winners

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin