Last Updated:
கடந்த மூன்று ஆண்டுகளாக சேமித்த பத்து ரூபாய் நாணயங்களைக் கொடுத்து புதிய இருசக்கர வாகனம் வாங்கியுள்ளார்.
நட்புக்காக திரைப்படத்தில் சரத்குமாரும், விஜயகுமாரும் நூறு ரூபாய் நோட்டுகளை மூட்டை கட்டிச் சென்று கார் வாங்கும் காட்சி போன்று, தெலங்கானா மாநிலத்தில் பாதிரியார் ஒருவர் பத்து ரூபாய் நாணயங்களை கொட்டிக கொடுத்து இருசக்கர வாகனம் வாங்கியுள்ளார்.
மஞ்சிரியால் மாவட்டம் லட்சிதி பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரவி ஜோசப். இவர், பல்வேறு தருணங்களில் தனக்கு கிடைத்த பத்து ரூபாய் நாணயங்களை கடந்த மூன்று ஆண்டுகளாக சேமித்து வைத்திருந்தார். ஒரு லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் சேமித்த அவர், நாணயங்களை பேக்கில் எடுத்துக்கொண்டு பைக் ஷோரூமுக்கு குடும்பத்துடன் சென்றார்.
ஷோ ரூமில் 10 ரூபாய் நாணயங்களை கொட்டியதும், ஊழியர்கள் கை வலிக்க அவற்றை எண்ணி சரிபார்த்தனர். பின்னர், பாதிரியார் ரவி ஜோசப் புதிய இருசக்கர வாகனத்தை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றார்.


