• Login
Sunday, October 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

11 வயது சிறுமியை வன்புணர்ந்த பெரியப்பாவுக்கு 25 வருட சிறை

GenevaTimes by GenevaTimes
October 11, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
11 வயது சிறுமியை வன்புணர்ந்த பெரியப்பாவுக்கு 25 வருட சிறை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter





ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவில் 11 வயது சிறுமியைக் கவர்ந்து சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 37 வயதுடைய குற்றவாளிக்கு 25 வருட சாதாரண சிறைத்தண்டனையும் தண்டப்பணமும் விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


2020 ஆம் ஆண்டு ஏறாவூர் பொலிஸ் பிரிவில் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பில், சட்டமா அதிபரால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டவருக்கே மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் வெள்ளிக்கிழமை (09.10.2026) இந்தத் தீர்ப்பினை வழங்கினார்.


குற்றவாளிக்கு எதிராகத் தண்டனைச் சட்டக்கோவை 354 இன் கீழ் சிறுமியைக் கடத்திச் சென்றமை மற்றும் தண்டனைச் சட்டக்கோவை 364 இன் கீழ் சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 04 ஆம் திகதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சட்டமா அதிபரால் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.


இவ்வழக்கில் சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டத்தரணி எஸ். அனுஷாங்கன் ஆஜராகி வழக்கை நடத்திவந்திருந்தார்.


துஷ்பிரயோகத்துக்குள்ளான சிறுமியால் “பெரியப்பா” என அழைக்கப்படும் சந்தேக நபர் கடந்த மாதம் 25 ஆம் திகதி குற்றவாளியாக உறுதிப்படுத்தப்பட்டு, வெள்ளிக்கிழமை (09.10.2026) தண்டனை வழங்கும் தீர்ப்பை நீதிபதி அறிவித்தார்.


இதன்படி, வழக்கின் தண்டனைத் தீர்ப்பாக முதலாவது குற்றமான, பெற்றோருக்குத் தெரியாமல் சிறுமியைக் கவர்ந்து சென்றமைக்காக 10 வருடங்களும், இரண்டாவது குற்றமான பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டமைக்காக 15 வருடங்களுமாக மொத்தம் 25 வருடங்கள் சாதாரண சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.


மேலும், குற்றவாளி பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 01 இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும், அந்த நஷ்டஈட்டைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், தண்டப்பணமாக 20 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.


 



Read More

Previous Post

ஜோகூரில் முழு அடைப்பு: கோலாலம்பூர் – சிலாங்கூரில் உள்ள சில பகுதிகளைத் தவிர, மற்ற மாநிலங்களில் பள்ளிகள் நாளை மீண்டும் திறக்கப்படும் | Makkal Osai

Next Post

இந்திய இனிப்புகளின் அரசன் எது தெரியுமா? அரண்மனை சமையலறையில் பிறந்த ஸ்வீட்டின் வரலாறு! 

Next Post
இந்திய இனிப்புகளின் அரசன் எது தெரியுமா? அரண்மனை சமையலறையில் பிறந்த ஸ்வீட்டின் வரலாறு! 

இந்திய இனிப்புகளின் அரசன் எது தெரியுமா? அரண்மனை சமையலறையில் பிறந்த ஸ்வீட்டின் வரலாறு! 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin