புகைமூட்டம் காரணமாக ஜோகூர் மற்றும் கோலாலம்பூர், சிலாங்கூரில் உள்ள நான்கு மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதைத் தவிர, நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் நாளை மீண்டும் திறக்கப்படும். கோலாலம்பூரில் உள்ள பங்சார்,புடு, சிலாங்கூரில் உள்ள உலு லங்காட், கோம்பாக், பெட்டாலிங் பெர்டானா ஆகிய மாவட்டங்கள் அதில் அடங்கும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் தெரிவித்தார்.
அனைத்து பெற்றோர்களும் பள்ளி சமூகத்தினரும் மேலதிக தகவல்களுக்கு கல்வி அமைச்சகம் மற்றும் அந்தந்த மாநில, மாவட்ட கல்வித் துறைகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அவர் இன்று ஒரு முகநூல் பதிவில் கூறினார். மாலை 4 மணி நிலவரப்படி, தீபகற்ப மலேசியாவில் 14 பகுதிகளில் ஆரோக்கியமற்ற ஏபிஐ அளவுகளும், 48 பகுதிகளில் மிதமான அளவுகளும், ஐந்து பகுதிகளில் நல்ல காற்றுத் தரமும் பதிவாகியுள்ளன.



