• Login
Sunday, October 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

வருமானம் மற்றும் வேலைவாய்ப்புகளைப் பொறுத்தே 2027 பட்ஜெட்டின் வெற்றி அமையும்: சம்சூரி – Malaysiakini

GenevaTimes by GenevaTimes
October 11, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2027 வரவுசெலவுத் திட்டத்தின் வெற்றியானது வருமானத்தை எவ்வளவு சிறப்பாக உயர்த்துகிறது, தரமான வேலைவாய்ப்புகளை வழங்குகிறது மற்றும் வாழ்க்கைச் செலவினங்களைக் குறைக்கிறது என்பதைக் கொண்டே மதிப்பிடப்பட வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் அகமத் சம்சூரி மொக்தார் தெரிவித்துள்ளார்.

கெமாமான் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்சூரி, இந்த 459.8 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வரவுசெலவுத் திட்டம் ஒரு பெரிய செலவின அர்ப்பணிப்பைக் காட்டுவதாகவும், ஆனால் அதிகரித்து வரும் கடன் சேவைச் செலவுகள் காரணமாக செலவினத் திறனை மேம்படுத்த வேண்டியது அவசியம்.

ஒதுக்கப்பட்ட 459.8 பில்லிய ரிங்கிட்டிலிருந்து, 376.8 பில்லியன் ரிங்கிட் செயல்பாட்டுச் செலவுகளுக்காகவும், 83 பில்லியன் ரிங்கிட் வளர்ச்சிச் செலவுகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடன் சேவைச் செலவுகள் 61 பில்லிய ரிங்கிட்டை எட்டியுள்ள நிலையில், நாட்டின் நீண்டகால நிதித் திறனை உறுதி செய்வதற்காக நிதி ஒழுக்கமும் செலவினத் திறனும் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும், என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் பொது-தனியார் கூட்டாண்மை மூலமாக முதலீடு மற்றும் நிதியுதவியாகக் கிடைக்கும் கூடுதல்  50.2 பில்லியன் ரிங்கிட் அதன் பொருளாதாரப் பலன்கள் மற்றும் நிதிப் பொறுப்புகள் வெளிப்படையாக மதிப்பிடப்படுவதை உறுதி செய்ய உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட வேண்டும்.

தெரங்கானு மந்திரி பெசார், ரஹ்மா ரொக்க உதவி மற்றும் மக்கள் அடிப்படை உதவி ஆகிய நிதியுதவிகளையும், தொழிலாளர்களின் வருமானத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளையும் வரவேற்றுள்ளார்.

இருப்பினும், மக்களின் வாங்கும் திறனை அதிகரிப்பது, அதற்கு ஏற்ற வேலை வாய்ப்புகளை வழங்குவது மற்றும் உள்ளூர் நிறுவனங்களை வலுப்படுத்துவது ஆகியவையே நீண்ட கால முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

2027 வரவுசெலவுத் திட்டத்தின் (பட்ஜெட்) கீழ், அனைத்து ரஹ்மா ரொக்க உதவி  பெறுநர்களும் 2027-ஆம் ஆண்டில் மாதம் 150 ரிங்கிட் வரை அல்லது ஆண்டுக்கு 1,800 ரிங்கிட் வரை மக்கள் அடிப்படை உதவியை (SARA) பெறுவார்கள். இந்த இரு திட்டங்களுக்கான ஒட்டுமொத்த ஒதுக்கீடு 15 பில்லியன் ரிங்கிட்டிலிருந்து 16 பில்லியன் ரிங்கிட்டாக​ மக்கள் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், ஜூன் 2027 முதல் குறைந்தபட்ச ஊதியம் மாதம் 1,700 ரிங்கிட்டிலிருந்து 2,000 ஆக உயர்த்தப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன் மூலம் நான்கு மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் பயனடைவார்கள்.

 

 

 

-fmt



Read More

Previous Post

3ஆவது டி20 மேட்ச்.. 14 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை சாய்த்த இந்தியா! | கிரிக்கெட் செய்திகள்

Next Post

ரியாத் விமான நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல்: வான் வழியிலேயே சுட்டு வீழ்த்திய சவூதி படை

Next Post
ரியாத் விமான நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல்: வான் வழியிலேயே சுட்டு வீழ்த்திய சவூதி படை

ரியாத் விமான நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல்: வான் வழியிலேயே சுட்டு வீழ்த்திய சவூதி படை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin