யாழில் முச்சக்கர வண்டி ஒன்றும் கப் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
குறித்த சம்பவம் இன்று (11-10-2026) வடமராட்சிக் கிழக்கு, தாளையடி சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.
மேலதிக விசாரணை
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கட்டைக்காடு பகுதியிலிருந்து செம்பியன்பற்று வடக்கு நோக்கிப் பயணித்த
வாகனமும் புதுக்காட்டுப் பகுதியில் இருந்து தாளையடி கடற்கரை நோக்கிப் பயணித்த
முச்சக்கர வண்டியும் தாளையடி சந்திப் பகுதியில் விபத்துக்கு உள்ளாகியுள்ளன.
இதனால் முச்சக்கர வண்டி பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

விபத்தில்
பாதிக்கப்பட்டவர்கள் மருதங்கேணி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மந்திகை வைத்தியசாலைக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணிப் காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

