Last Updated:
உக்ரைனில் உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தற்போதைய அதிபர் ஜெலன்ஸ்கியை மாற்ற வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் உள்ள மிக முக்கியமான எரிபொருள் விநியோக நிலையத்தின் மீது உக்ரைன் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவுகிறது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவின் சமாரா மாகாணத்தில் உள்ள மிக முக்கிய எரிபொருள் விநியோக நிலையத்தைக் குறிவைத்து உக்ரைன் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தின.
முன்னதாக, கடந்த 7-ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் இங்குள்ள நான்கு சேமிப்புத் தொட்டிகள் அழிக்கப்பட்டுப் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, ஒரு வாரத்திற்குள் இந்த எண்ணெய் விநியோக நிலையம் மீது இரண்டாவது முறையாக உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. மறுபுறம், உக்ரைனின் கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள லுகாஷோவோ (Lukashovo) மற்றும் லோபனோவ்கா (Lobanovka) ஆகிய இரண்டு நகரங்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதனிடையே, ரஷ்யாவின் எண்ணெய் கட்டமைப்புகள் மீதான தாக்குதலை உக்ரைன் உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைனில் உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தற்போதைய அதிபர் ஜெலன்ஸ்கியை மாற்ற வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

