• Login
Sunday, October 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

விசாரணைக் காவலில் இருந்து ஜனாதிபதிக்கு நாமல் எழுதிய கடிதம்

GenevaTimes by GenevaTimes
October 11, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
விசாரணைக் காவலில் இருந்து ஜனாதிபதிக்கு நாமல் எழுதிய கடிதம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அத்தியாவசிய பாடசாலை உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்படும் பெறுமதி சேர் வரி (VAT) உள்ளிட்ட வரிகளை நீக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக இந்த வரிச் சலுகைகளை வழங்குமாறு கோரி, ஒக்டோபர் 9ஆம் திகதியிடப்பட்ட கடிதமொன்றை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.


2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தி முன்வைத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

வரிச் சலுகை வாக்குறுதி

பாடசாலைப் பாடப்புத்தகங்கள், எழுதுபொருட்கள், கல்வி உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு வரிச் சலுகை வழங்குவது தொடர்பான வாக்குறுதிகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விசாரணைக் காவலில் இருந்து ஜனாதிபதிக்கு நாமல் எழுதிய கடிதம் | Namal Writes To President From Remand Custody



உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால், முட்டை மற்றும் குழந்தைகளுக்கான பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு பூச்சிய சதவீத பெறுமதி சேர் வரி விதிப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்மொழியப்பட்டிருந்ததாகவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.



எனவே, குறித்த பொருட்களுக்கு தற்போது விதிக்கப்படும் வரிகளை மீளாய்வு செய்து, எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் வாக்குறுதியளிக்கப்பட்ட சலுகைகளை நடைமுறைப்படுத்துமாறு அவர் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.


கல்வி மற்றும் வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இந்த நடவடிக்கைகள் நிவாரணம் அளிப்பதுடன், சிறுவர்களின் கல்வி மற்றும் போசாக்கையும் மேம்படுத்த உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Gallery

Read More

Previous Post

நோபல் பரிசு கிடைக்காத விரக்தி… அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்த ஷாக் முடிவு! | World News (உலக செய்திகள்)

Next Post

நேபாளத்தில் மீண்டும் பெருவெள்ளம்… புத்தி கண்டகி ஆற்றில் பெருக்கெடுத்த நீரால் அச்சம்! | World News (உலக செய்திகள்)

Next Post
நேபாளத்தில் மீண்டும் பெருவெள்ளம்… புத்தி கண்டகி ஆற்றில் பெருக்கெடுத்த நீரால் அச்சம்! | World News (உலக செய்திகள்)

நேபாளத்தில் மீண்டும் பெருவெள்ளம்... புத்தி கண்டகி ஆற்றில் பெருக்கெடுத்த நீரால் அச்சம்! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin