Last Updated:
அமெரிக்க அதிபர் டிரம்ப், தனக்கு தான் அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு கிடைக்காத விரக்தியில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குத் தடை விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை வரம்பு மீறும் அமைப்பு என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ காட்டமாக பதிவிட்டுள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்கர்களையும் இஸ்ரேலியர்களையும் சட்டவிரோதமாக தண்டித்து வருவதாகவும் மார்கோ ரூபியோ குற்றம்சாட்டியுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக உள்ள தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட நவநீதம் பிள்ளைக்கு, வெள்ளிக்கிழமை அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
இதன்மூலம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு சொந்தமான சொத்துக்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்படும். அதனுடன் தொடர்பில் இருக்கும் நிறுவனங்களும், தனிநபர்களும் 6 மாதங்களுக்குள் தொடர்பை துண்டித்துக்கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. காசாவில் குழந்தைகள் மற்றும் அப்பாவி மக்களை கொன்று இனப்படுகொலை செய்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
இதேபோல், ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவத்திற்கும் கண்டனம் தெரிவித்திருந்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா- பாகிஸ்தான் மோதல் உள்ளிட்ட 8 போர்களை நிறுத்தியுள்ளதாகவும் தனக்கு தான் அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும் என்றும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


