Last Updated:
உக்ரைன் தலைநகர் கீவ்-வில், ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் இருந்து நூலிழையில் ஒருவர் தப்பித்துள்ளார்.
ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையே நான்கு ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை கடந்த புதன்கிழமை முதல் ரஷ்ய ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. புதன்கிழமை இரண்டு பேருந்துகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குழந்தைகள் உள்பட 33 பேர் கொல்லப்பட்டனர்.
இதேப்போல் வெள்ளிக்கிழமை, உக்ரைன் மீது இதுவரை இல்லாத வகையில் ஒரே இரவில் 160 டிரோன்களை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தியது. தலைநகர் கீவ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரஷ்யா தொடர்ந்து வான்வழி தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இந்த டிரோன் தாக்குதலில் இருந்து நூலிழையில் ஒருவர் தப்பித்த காட்சி தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
WATCH: A man narrowly escaped a jet-powered Shahed drone strike in the Kyiv region, fleeing just seconds before impact. https://t.co/WSV09MCXDo
— Clash Report (@clashreport) October 9, 2026
தென்கிழக்கு நகரமான சபோரிஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பு மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில், கட்டடம் மண்ணில் புதையுண்டது. கட்டட இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்ததாக சபோரிஷியா நகர நிர்வாகம் கூறியுள்ளது. இடிபாடுகளில் சிக்கி தவித்த மேலும் சிலரை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். உக்ரைன் மீது இடைவிடாமல் ரஷ்யா தாக்குதலை நடத்தி வருவதால், அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


