Last Updated:
தமிழ்நாடு, புதுச்சேரி இடைத்தேர்தலை ஒட்டி மேற்குவங்கத்தில் நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
மேற்கு வங்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நந்திகிராம் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 753 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிபெற்றார்.
தமிழ்நாடு, புதுச்சேரி இடைத்தேர்தலை ஒட்டி மேற்குவங்கத்தில் நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக மிகப்பெரிய வித்தியாசத்தில் முன்னிலையில் நீடித்தது.
இதில், நந்திகிராமில் பாஜக வேட்பாளர் ஹாசிராணி ராத் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 427 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். கடைசி நேரத்தில் முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தரப்பு வேட்பாளர் வாபஸ் பெற்றதால், அவர் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தார். இருந்த போதும், காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதான் 41 ஆயிரத்து 674 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்தார். இதேபோன்று, ரெஜிநகர் தொகுதியில் சங்கரவா சர்கார் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 914 வாக்குகள் பெற்று, 75 ஆயிரத்து 816 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
பிரதமர் மோடியின் வளர்ச்சித் திட்டத்திற்கும், பாஜகவின் நல்லாட்சிக்கும் சான்றாக அமைந்த இந்த வெற்றி வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்று மேற்குவங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி பெருமிதம் தெரிவித்துள்ளார். இதனிடையே, அசாமில் உள்ள நாகோன் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலிலும் பாஜக வேட்பாளர் தேவசிஷ் சர்மா அமோக வெற்றிபெற்றார். மேற்குவங்கம் மற்றும் அசாம் இடைத்தேர்தலில் பாஜக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றதை அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.


