சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பயணிகள் முனையம் ஒன்றை ஏவுகணை தாக்கியதாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அவசர மருத்துவ சேவைகள் விமான நிலையத்தை நோக்கி விரைந்ததாகக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், ரியாத்துக்குச் செல்லவிருந்த சில விமானங்கள் மாற்று விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் Flightradar24 சேவை தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
தொடர்ந்து இடம்பெற்று வரும் இராணுவ நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, விமான நிலையத்திற்குச் செல்வதைத் தவிர்க்குமாறு சவூதி அரேபியாவிலுள்ள தனது குடிமக்களுக்கு கனடியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அண்டை நாடான யேமனில் சவூதி அரேபியாவுக்கும் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஒரு வார காலப்பகுதியில் கிங் காலித் சர்வதேச விமான நிலையம் பலமுறை இலக்கு வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Security Alert: U.S. Mission Saudi Arabia (October 10, 2026) The U.S. Mission is aware of attacks on King Khalid International Airport in Riyadh on October 10 and strongly recommends all U.S. citizens avoid this airport and surrounding areas. U.S. government employees working in Saudi Arabia require special authorization to use the King Khalid International Airport in Riyadh. U.S. citizens should be aware of potential flight cancellations, airspace closures, and travel disruptions. We recommend checking your flight departure status directly with the airline and with the airport. U.S. Government Employee Travel Restrictions: U.S. government employees working in Saudi Arabia require special authorization to use the King Khalid International Airport in Riyadh. U.S. government employees working in Saudi Arabia are not allowed to travel within 20 miles of the Yemen border due to safety risks and need special authorization for travel to the provinces of Jizan, Asir, Najran, and the cities of Qatif, Yanbu, and Taif. Read more: https://t.co/uBrNoUIE3W
— U.S. Embassy Riyadh (@USAinKSA) October 10, 2026
முன்னதாக ஹவுதிகள் பொறுப்பேற்ற தாக்குதல்களில் மூன்று சவூதி குடிமக்கள் மற்றும் ஒரு சூடான் நாட்டவர் உட்பட நான்கு பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
மேலும், ரியாத் நகரில் குறைந்தது இரண்டு சக்திவாய்ந்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக மத்திய கிழக்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

