தற்போதைய நடைமுறைப்படி, தனிப்பட்ட வர்த்தகர்கள் தங்கம் இறக்குமதி செய்யும் போது 3 சதவீத ஐஜிஎஸ்டி செலுத்த வேண்டியுள்ள நிலையில், குறிப்பிட்ட சில வங்கிகளுக்கு மட்டும் இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விலக்கு ரத்து செய்யப்பட்டால், வங்கிகள் மற்றும் சாதாரண புல்லியன் (Bullion) வர்த்தகர்கள் அனைவரும் ஒரே மாதிரியான வரி முறைக்குள் கொண்டுவரப்படுவார்கள். இதன் மூலம் வரி அமைப்பில் வெளிப்படைத்தன்மையும், சீரான தன்மையும் உருவாக்கப்படும் என்று அரசு தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.


