Last Updated:
தனக்கு நோபல் பரிசு வழங்காத நார்வே நாட்டில் உள்ள நோபல் கமிட்டியை தான் ஒருபோதும் மறக்க மாட்டேன் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.
8 போர்களை நிறுத்திய தனக்கு, இதுவரை 8 நோபல் பரிசுகள் வழங்கி இருக்க வேண்டும் எனக் கூறியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், நோபல் கமிட்டி மீது அழிக்க முடியாத கரை ஏற்பட்டு இருப்பதாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால், நடப்பாண்டு அமைதிக்கான நோபல் பரிசு தென்னாப்பிரிக்காவில் பிறந்த தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட நவநீதம் பிள்ளைக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், நியூயார்க்கில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், நடப்பாண்டு நோபல் பரிசுக்கு தேர்வாகியுள்ளவர் யாரென்றே தனக்குத் தெரியாது என்று குறிப்பிட்டார்.


