ஞானசார தேரரின் காவி உடையை களைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவரை விடுவிப்பதற்காகவும் மகா சங்கத்தினரை முன்னிலைப்படுத்திய பாதயாத்திரை சற்றுமுன் ஆரம்பமாக்கியுள்ளது.
தலதா மாளிகை மற்றும் வாரியப்பொல சுமங்கல தேரரின் சிலைக்கு அருகிலும் இன்று (10) ஆரம்பமான இந்த பாதயாத்திரை, ஞானசார தேரர் சிறைவைக்கப்பட்டுள்ள இடம் வரை சென்றடையவுள்ளது.
இங்கு கருத்துத் தெரிவித்த பூஜ்ய உலப்பனே சுமங்கல தேரர், தற்போதைய அரசாங்கத்தினால் தன்னிச்சையான முறையில் ஞானசார தேரருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்தார்.
ஞானசார தேரர் சிறையிலடைக்கப்பட்டது
கடந்த காலத்தில் வாரியப்பொல ஸ்ரீ சுமங்கல தேரர் தேசத்தினதும் சம்புத்த சாசனத்தினதும் பாதுகாப்புக்காகக் குரல் கொடுத்தது போன்று, ஞானசார தேரரும் நாடு, தேசம் மற்றும் சாசனத்தின் அபிவிருத்திக்காகவே குரல் எழுப்பினார் என அவர் சுட்டிக்காட்டினார்.

ஞானசார தேரர் சிறையிலடைக்கப்பட்டது அவரது தனிப்பட்ட காரியத்திற்காக அல்ல எனவும், அவர் சிறைத்தண்டனை அனுபவிப்பது முழு தேசம் மற்றும் சாசனத்திற்காகவே எனவும் தெரிவித்த சுமங்கல தேரர், அவரைத் தனிமைப்படுத்தாமல் நிபந்தனையின்றி அவருக்காக முன்னிற்பது அனைவரினதும் கடமையாகும் என வலியுறுத்தினார்.
அவருக்கு விடுதலை கிடைக்கும் வரை மற்றும் அநீதிக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டம் எந்த வகையிலும் கைவிடப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்தார்
மேலும் நிலவும் அடக்குமுறைகளுக்கு மத்தியில் வன்முறையற்ற முறையில் பாதயாத்திரையில் இணையுமாறும் உலப்பனே சுமங்கல தேரர் கோரிக்கை விடுத்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

