• Login
Friday, October 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஜியோ ஸ்டாரின் ஐபிஎல் ஒளிபரப்பில் முக்கிய இடம்பிடித்த பிராந்திய மொழிகள்… அடுத்து ஓர் புதிய முயற்சி! | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 9, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஜியோ ஸ்டாரின் ஐபிஎல் ஒளிபரப்பில் முக்கிய இடம்பிடித்த பிராந்திய மொழிகள்… அடுத்து ஓர் புதிய முயற்சி! | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐபிஎல் போட்டிகளைப் பிராந்திய மொழிகளில் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களை விளம்பரதாரர்களுடன் இணைக்கும் வகையில் ‘Beyond Boundaries’ என்ற புதிய முயற்சியை ஜியோஸ்டார் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நேரடி கிரிக்கெட் ஒளிபரப்புகள் மற்றும் போட்டிக்கு முந்தைய, போட்டிக்குப் பிந்தைய நிகழ்ச்சிகள் வாயிலாக விளம்பரதாரர்கள் பிராந்திய மொழி ரசிகர்களைச் சென்றடைய முடியும்.

கிரிக்கெட் போட்டிகளைத் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் பார்ப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டிஜிட்டல் தளங்களில் இந்த மொழிகளில் ஒளிபரப்பாகும் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 2026-ஆம் ஆண்டு டாடா ஐபிஎல் தொடரின்போது, ஜியோ ஹாட்ஸ்டாரில் பிராந்திய மொழி ஒளிபரப்புகளின் பார்வையாளர்கள் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட கணிசமாக அதிகரித்துள்ளது.

கன்னட மொழி ஒளிபரப்பின் ரீச் கடந்த ஆண்டை விட 30% அதிகரித்துள்ளது. அதுவே, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் முறையே 23% மற்றும் 12% வளர்ச்சி பதிவாகியுள்ளது. அதேநேரத்தில், டிஜிட்டல் தளத்தில் போட்டிகளைப் பார்க்கச் செலவிட்ட நேரத்தின் பங்கில் தெலுங்கு மொழி 30% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்தப் பிரிவில் கன்னடம் மற்றும் தமிழ் மொழிகளும் வளர்ச்சியைப் பெற்றுள்ளன. இந்த வளர்ச்சி, கிரிக்கெட் போட்டிகளை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமின்றி, தங்களுக்குப் பரிச்சயமான பிராந்திய மொழிகளிலும் ரசிகர்கள் அதிக அளவில் பார்க்க விரும்புவதை எடுத்துக்காட்டுகிறது.

பிராந்திய மொழிகளில் கிரிக்கெட் ஒளிபரப்பை வழங்குவதுடன், அந்தந்த மாநில ரசிகர்களின் ஆர்வத்துக்கு ஏற்ப நிகழ்ச்சிகளையும் ஜியோஸ்டார் உருவாக்கியுள்ளது. தெலுங்கில் கிரிக்கெட் வித் சாய் மற்றும் ஆரஞ்சு ஓ ரங்கு, கன்னடத்தில் கெம்பு சைன்யா மற்றும் இன்சைடு ஆர்சிபி, தமிழ் “இனி சிங்கப்பாதை” என்ற கருப்பொருளில் 2026 ஐபிஎல் தொடரில் இடம்பெற்ற சில நிகழ்ச்சிகள். மேலும், மூன்று மொழிகளிலும் வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

பிராந்திய மொழி ஒளிபரப்புகளுக்காக 12 மொழிகளில் 160-க்கும் மேற்பட்ட வர்ணனையாளர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் இடம்பெற்றனர். தமிழ் ஒளிபரப்பில் முன்னாள் இந்திய வீரர்களான முரளி விஜய், எல். பாலாஜி, இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரஸ்ஸல் அர்னால்ட் மற்றும் ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் இடம்பெற்றனர். தெலுங்கு ஒளிபரப்பில் ஹனுமா விஹாரி, எம்.எஸ்.கே. பிரசாத் ஆகியோரும், கன்னட ஒளிபரப்பில் வினய் குமார், வேதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் வர்ணனையாளர்களாக இடம்பெற்றனர்.

ஒவ்வொரு மொழிக்கும் அந்தந்தப் பகுதி ரசிகர்களுக்குப் பரிச்சயமான நபர்களைக் கொண்டு ஒளிபரப்பை வழங்குவது ஜியோஸ்டாரின் அணுகுமுறையாக உள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வர்ணனையை வழங்குவதற்குப் பதிலாக, ஒவ்வொரு மாநிலத்தின் கிரிக்கெட் ஆர்வத்துக்கும் ஏற்ற வகையில் நிகழ்ச்சிகள் அமைக்கப்படுகின்றன.

2026 ஐபிஎல் தொடரில் டிஜிட்டல் தளத்தின் பார்வையாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. டிஜிட்டல் வீடியோ பார்வைகள் 25 பில்லியன் அளவை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 8% அதிகம். இந்த வளர்ச்சி, தொலைக்காட்சியில் கிடைக்கும் பெரிய அளவிலான பார்வையாளர் அணுகலையும் டிஜிட்டல் தளங்களின் விளம்பர இலக்கு நிர்ணய வசதிகளையும் இணைப்பதற்கான வாய்ப்பை விளம்பரதாரர்களுக்கு வழங்குகிறது.

இதற்கிடையே ஜியோஸ்டாரின் விளையாட்டுப் போட்டிகள் விற்பனைப் பிரிவுத் தலைவர் அனுப் கோவிந்தன் இதுபற்றி கூறுகையில் “பிராந்திய மொழிகளில் கிரிக்கெட் பார்ப்பது அதிகரித்து வருவது, இந்தியாவில் ரசிகர்கள் கிரிக்கெட்டை ரசிக்கும் விதம் மாறி வருவதைக் காட்டுகிறது. அதிகமானோர் போட்டிகளைப் பார்ப்பது மட்டுமல்லாமல், தங்களுக்குப் பரிச்சயமான மொழிகளிலும் சூழலிலும் போட்டிகளை அனுபவிக்க விரும்புகின்றனர்.

விளம்பர நிறுவனங்களைப் பொறுத்தவரை இது முக்கியமானது. ஏனெனில், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ரசிகர்களுடன் இன்னும் நெருக்கமாகத் தொடர்புகொள்வதற்கான வாய்ப்பை இது வழங்குகிறது. ஒவ்வொரு பகுதி ரசிகர்களின் தனித்துவத்தையும் புரிந்துகொண்டு அதற்கேற்ப விளம்பரங்களைத் திட்டமிடுவதுதான் முக்கியம்” என்றார்.

ஒட்டுமொத்தமாக, ஐபிஎல் போட்டிகளைப் பிராந்திய மொழிகளில் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, கிரிக்கெட் ஒளிபரப்புத் துறையில் முக்கியமான மாற்றமாக உருவெடுத்துள்ளது. இது ரசிகர்களுக்கு மட்டுமின்றி, விளம்பரதாரர்களுக்கும் தங்களுக்குத் தேவையான பார்வையாளர்களைச் சென்றடைய புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது.

Read More

Previous Post

தரங் சக்தி 2026: இந்திய விமானப்படையின் சர்வதேச வான்வழி போர்ப்பயிற்சி..! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

Gold Price In 2030 | அடுத்த 3-4 ஆண்டுகளில் சரியும் தங்கம் விலை? வெளியாகும் கணிப்புகள்.. நகை பிரியர்கள் காத்திருக்கலாமா?

Next Post
Gold Price In 2030 | அடுத்த 3-4 ஆண்டுகளில் சரியும் தங்கம் விலை? வெளியாகும் கணிப்புகள்.. நகை பிரியர்கள் காத்திருக்கலாமா?

Gold Price In 2030 | அடுத்த 3-4 ஆண்டுகளில் சரியும் தங்கம் விலை? வெளியாகும் கணிப்புகள்.. நகை பிரியர்கள் காத்திருக்கலாமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin