• Login
Friday, October 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கு… தோனி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு! | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 9, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கு… தோனி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு! | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 09, 2026 12:28 PM IST

மகேந்திர சிங் தோனி தொடர்ந்த மான நஷ்டஈட்டு வழக்கில், அவரது வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்யக் கோரி சம்பத்குமார் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நூறு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரிய வழக்கில், முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்யக் கோரிய வழக்கில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மனுவுக்கு தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பான வழக்கு குறித்த தொலைக்காட்சி விவாதத்தில், தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் கூறியதாக ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார், தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக நூறு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கோரி கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி, 2014-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தோனியின் வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்யக் கோரி, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், வாக்குமூலம் பதிவு செய்வதை கண்காணிக்க நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும்; வீடியோ பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தை எடிட் செய்யாமல் தனக்கு வழங்க உத்தரவிட வேண்டும்; வாக்குமூல பதிவை, ஐந்து நட்சத்திர விடுதி அல்லது தனியார் பங்களாக்களில் நடத்தாமல், நீதிமன்றம் அல்லது அரசு கட்டிடங்களில் நடத்த வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடர் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்யவும், வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதை அரசு கட்டிடம் அல்லது நீதிமன்றத்தில் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டது. அப்போது, குறுக்கிட்ட நீதிபதி, நட்சத்திர விடுதியில் தோனியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதில் என்ன பிரச்சினை? அதற்கான செலவுகளை அவர்கள்தானே செய்யப்போகிறார்கள்? என கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, தோனி தரப்பில் பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க தோனிக்கு உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 29-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Read More

Previous Post

அமெரிக்க நிரந்தரக் குடியுரிமை நடைமுறையில் பெரிய தடை? இந்திய ஐடி ஊழியர்களுக்கு என்னவாகும்? | Is there a major hurdle in the US Green Card process? What will happen to Indian IT employees?

Next Post

Iran: "அதுவரை ஈரானைத் தாக்கமாட்டோம்" – ட்ரம்ப்பின் முடிவுக்குக் காரணம் என்ன?

Next Post
Iran: "அதுவரை ஈரானைத் தாக்கமாட்டோம்" – ட்ரம்ப்பின் முடிவுக்குக் காரணம் என்ன?

Iran: "அதுவரை ஈரானைத் தாக்கமாட்டோம்" - ட்ரம்ப்பின் முடிவுக்குக் காரணம் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin