• Login
Friday, October 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கார்கில் போர் முதல் விவசாயிகளுக்கான அறக்கட்டளை வரை: வெளிவராத நானா படேகரின் மற்றொரு முகம்..!! | From Kargil to Farmers’ Fields: The Untold Heroism of Nana Patekar Beyond Cinema

GenevaTimes by GenevaTimes
October 9, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
கார்கில் போர் முதல் விவசாயிகளுக்கான அறக்கட்டளை வரை: வெளிவராத நானா படேகரின் மற்றொரு முகம்..!! | From Kargil to Farmers’ Fields: The Untold Heroism of Nana Patekar Beyond Cinema
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கார்கில் போர் முதல் விவசாயிகளுக்கான அறக்கட்டளை வரை: வெளிவராத நானா படேகரின் மற்றொரு முகம்..!!

பிரபல நடிகர் நானா படேகரின் திடீர் மறைவு ஒட்டு மொத்த இந்திய திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் திரையுலக பிரபலங்கள், பிரதமர் மோடி உள்பட அரசியல் தலைவர்களும் நானா படேகரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தனது அசாத்தியமான நடிப்பால் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்தவர் நடிகர் நானா படேகர். மிக சாதாரண குடும்பத்தில் இருந்து திரையுலகிற்கு வந்து, தனது கடின உழைப்பால் கோடிக்கணக்கான சொத்து மதிப்பு கொண்ட சாம்ராஜ்ஜியத்தையே அவர் உருவாக்கியுள்ளார். வெறும் நடிகராக மட்டுமில்லாமல் நாட்டுக்கு பல வழிகளிலும் இவர் சேவையாற்றி இருக்கிறார்.

கார்கில் போர் முதல் விவசாயிகளுக்கான அறக்கட்டளை வரை: வெளிவராத நானா படேகரின் மற்றொரு முகம்..!!

மகாராஷ்ட்ராவை சேர்ந்த நானா படேகருக்கு 13 வயதாக இருக்கும் போதே அவரது தந்தை வணிகத்தில் அனைத்தையும் இழந்து திவாலானார். இதனால் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு சிறு வயதிலேயே அவர் மீது விழுந்தது. இதனால் பள்ளியை முடித்தவுடன் தினமும் சுமார் 8 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று, மும்பை சுனாபட்டி பகுதியில் சினிமா போஸ்டர்களுக்கு வண்ணம் தீட்டும் வேலையை செய்தார். இந்த வேலைக்காக அவருக்கு மாதத்திற்கு 35 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டதுடன், நாளொன்றுக்கு ஒரு வேளை உணவும் கிடைத்தது.

போஸ்டர் பெயிண்டராக தொடங்கிய நானா படேகர் பின்னர் நாடக துறை வழியாக பாலிவுட் படங்களில் தோன்றினார். 1978ஆம் ஆண்டில் இவரது முதல் படம் வெளியானது. தனது திறமையின் மூலம் முன்னணி நடிகராக உயர்ந்த அவர், ஒரு திரைப்படத்தில் நடிக்க 2 கோடி முதல் 3 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்றார். சில படங்களில் லாபத்தில் பங்கீடு பெறும் முறையையும் அவர் பின்பற்றினார்.

திரைப்படங்களை தவிர, பல்வேறு பிரபல பிராண்டுகள் மற்றும் நிறுவனங்களின் விளம்பர படங்களில் நானா படேகர் தோன்றினார். ஒரு விளம்பரத்தில் தோன்ற 80 லட்சம் முதல் 1 கோடி ரூபாட் வரை சம்பளம் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நானா படேகரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 80 கோடி ரூபாய் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கோடிகளில் சொத்துக்கள் இருந்தாலும், அவர் மிகவும் எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்தார். தான் ஆரம்பத்தில் வாங்கிய மும்பை அந்தேரி பகுதியில் உள்ள 750 சதுர அடி கொண்ட ஒரு படுக்கை அறை வீட்டிலேயே தனது இறுதிவரை வாழ்ந்து வந்தார்.

நானா படேகர் புனேவுக்கு அருகில் உள்ள கடகவாஸ்லா பகுதியில் சுமார் 27 ஏக்கர் பரப்பளவில் ஒரு பெரிய ஃபார்ம்ஹவுஸ் வாங்கி அங்கே விவசாயம் செது வந்தார். மேலும் கோவாவில் வசித்து வந்த அவர், டொனா பவுலா பகுதியிலும் வீடு வாங்கி வைத்திருந்தார். இவரிடம் மஹிந்திரா ஜீப் , Audi Q5/Q7 மற்றும் BMW X6 போன்ற கார்கள் உள்ளன.

தான் சேர்த்த சொத்து மற்றும் பணத்தை தனது தனிப்பட்ட ஆடம்பரங்களுக்கு மட்டும் பயன்படுத்தாமல், சமூக நலனுக்காகவும் குறிப்பாக விவசாயிகளின் நலனுக்காகவும் பெரிதும் அர்ப்பணித்தார். மகாராஷ்டிராவில் வறட்சியால் பாதிக்கப்பட்டு தவித்த ஆயிரக்கணக்கான விவசாயிகளின் குடும்பங்களுக்கு உதவ NAAM Foundation என்ற அமைப்பை தொடங்கி பல ஆக்கபூர்வமான உதவிகளை செய்து ரியல் ஹீரோவாக திகழ்ந்தார்.

நானா படேகரின் வெளிவராத மற்றொரு முகம் கார்கில் போரில் நாட்டுக்காக அவர் பங்கேற்றது. 1980களில் முறையான போர் பயிற்சியை பெற்றிருந்தார் நானா படேகர். இந்நிலையில் 1999ஆம் ஆண்டு கார்கில் போரின் போது அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சரை சந்தித்து போரில் பங்கேற்க தனக்கு உள்ள தகுதிகல், சான்றிதழ்களை குறிப்பிட்டு அனுமதி கோரினார். பாதுகாப்பு அமைச்சர் அனுமதி தரவே இந்திய ராணுவத்தில் இணைந்து போரில் கலந்து கொண்டார். ஸ்ரீநகர், லே உள்ளிட்ட பகுதிகளில் 60 நாட்கள் அவர் ராணுவத்தில் சேவை புரிந்தார். சராசரி நடிகராக மட்டுமில்லாமல் விவசாயிகளுக்காகவும் நாட்டுக்காகவும் சேவை புரிந்தவர் என்பதால் தான் அவரது மரணம் நாடு முழுவதும் உள்ள மக்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது.

Share This Article

English summary

From Kargil to Farmers’ Fields: The Untold Heroism of Nana Patekar Beyond Cinema

கார்கில் போர் முதல் விவசாயிகளுக்கான அறக்கட்டளை வரை: வெளிவராத நானா படேகரின் மற்றொரு முகம்..!! Veteran actor Nana Patekar, who died at 75 on October 8, 2026, is being remembered not just for his legendary film career but for his real-life heroics—from serving with the Indian Army during the 1999 Kargil War to founding the NAAM Foundation.

Story first published: Thursday, October 8, 2026, 14:30 [IST]

Other articles published on Oct 8, 2026

Read More

Previous Post

டீப்ஃபேக், சைபர் அச்சுறுத்தல்களுக்கு செக் வைக்கும் மத்திய அரசு..  இந்தியாவில் AI-க்கு புதிய விதிகள்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

கொள்ளை நோய் பிளேக்கின் அறிகுறிகள் என்ன? ரஷியாவில் பரவலா… ஓர் அலசல் | Makkal Osai

Next Post
கொள்ளை நோய் பிளேக்கின் அறிகுறிகள் என்ன? ரஷியாவில் பரவலா… ஓர் அலசல் | Makkal Osai

கொள்ளை நோய் பிளேக்கின் அறிகுறிகள் என்ன? ரஷியாவில் பரவலா... ஓர் அலசல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin