Last Updated:
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, டெல்லியில் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் உட்பட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் டெல்லியில் தொடர் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். கடந்த 6ஆம் தேதி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி சென்ற நிலையில், ஆகாஷ்வானி வளாகத்தின் அருகே தடுத்து நிறுத்தப்பட்டு பின் இரவு கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் நேற்று (7ஆம் தேதி) ஜந்தர் மந்தர் நோக்கி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணி செல்ல முயன்றபோது அவர்களை தடுத்து காவல்துறை கைது செய்தது. இந்தக் கைதின் போது, எம்.பி.க்கள் தாக்கப்பட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று மகாத்மா காந்தி நினைவு இடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி., தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான மாணிக்கம் தாகூர், “கடந்த 3 நாட்களாக, எதிர்க்கட்சிகளின் இந்திய அணி டெல்லி வீதிகளில் இறங்கியுள்ளது. முதலில், ஞானேஷ் குமார் ‘வாக்குத் திருட்டில்’ ஒரு அங்கம் என்பதை அவருக்குத் தெரிவிப்பதற்காக, நாங்கள் நாடாளுமன்றத்திலிருந்து தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்திக்கச் சென்றோம்.
இரண்டாவதாக, நேற்று நாங்கள் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தச் சென்றோம். எங்களை அனுமதிக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மிகவும் மோசமாக நடத்தப்பட்டார். இன்று, நாங்கள் மகாத்மா காந்திக்கு அஞ்சலியைச் செலுத்த வந்தோம். அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
#WATCH | INDIA bloc protest | Delhi: Leaving from Raj Ghat, Congress MP Manickam Tagore says, “For the past 3 days, the Opposition INDIA bloc is on the streets of Delhi. First, we went from Parliament to meet the CEC to convey to him that he has been a part of ‘vote chori’. Second, yesterday we went to protest at Jantar Mantar. We were not allowed. LoP Rahul Gandhi was treated very badly. Today, we came to pay our homage to Bapu. All the parties were represented. We said that the democratic principles of India are under attack. The right to dissent is being hijacked in India, we are being silenced and not being allowed to protest anywhere in Delhi. The CEC must go he has an understanding with Amit Shah and Mr Modi. To keep them in power, the CEC has done ‘vote chori’. Tomorrow morning we will let you know whenever there is a decision…”
— ANI (@ANI) October 8, 2026
இந்தியாவின் ஜனநாயகக் கோட்பாடுகள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன என்று நாங்கள் கூறினோம். இந்தியாவில் கருத்து வேறுபாடு தெரிவிக்கும் உரிமை அபகரிக்கப்படுகிறது, நாங்கள் அமைதியாக்கப்படுகிறோம், டெல்லியில் எங்கும் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படவில்லை. தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும், அவருக்கு அமித் ஷா மற்றும் மோடியுடன் ஒரு உடன்பாடு உள்ளது. அவர்களை அதிகாரத்தில் வைத்திருக்க, தலைமைத் தேர்தல் ஆணையர் ‘வாக்குத் திருட்டு’ செய்துள்ளார்” எனத் தெரிவித்தார்.


