• Login
Thursday, October 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

குவைத்தில் மனிதநேய கலாச்சார பேரவை நடத்திய இலவச மருத்துவ முகாம்: 300-க்கும் மேற்பட்டோர் பயன்! | Kuwait: Over 300 Expats Benefit from Humanitarian Cultural Association Free Medical Camp in Salmiya

GenevaTimes by GenevaTimes
October 8, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
குவைத்தில் மனிதநேய கலாச்சார பேரவை நடத்திய இலவச மருத்துவ முகாம்: 300-க்கும் மேற்பட்டோர் பயன்! | Kuwait: Over 300 Expats Benefit from Humanitarian Cultural Association Free Medical Camp in Salmiya
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Shyamsundar I

Time
Updated: Thursday, October 8, 2026, 14:12 [IST]

குவைத்: குவைத்தில் வாழும் புலம்பெயர் மக்களுக்காக, மனிதநேய கலாச்சார பேரவை (மஜகவின் சர்வதேச பிரிவு) சார்பில் 5-வது மாபெரும் இலவச மருத்துவ முகாம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

Kuwait

கடந்த அக்டோபர் 2, வெள்ளிக்கிழமை அன்று சால்மியா பகுதியில் அமைந்துள்ள சால்மியா மெடிக்கல் சென்டரில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மனிதநேய கலாச்சார பேரவையின் குவைத் மண்டலச் செயலாளர் பொதக்குடி சதக்கத்துல்லா இந்த நிகழ்விற்கு தலைமை தாங்கினார். மண்டல துணைச் செயலாளர் மாயவரம் சபீர் இறைவணக்கம் ஓதி முகாமைத் தொடங்கி வைக்க, இளைஞரணி செயலாளர் சீர்காழி யூனுஸ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மண்டல அவைத் தலைவர் கோணுழாம்பள்ளம் அன்சாரி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

Kuwait

இந்த முகாமில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு மருத்துவப் பரிசோதனைகளையும் உரிய ஆலோசனைகளையும் இலவசமாகப் பெற்றனர். முன்பதிவு செய்திருந்தவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வரிசையில் காத்திருந்து பரிசோதனை செய்து கொண்டனர்.

Kuwait

பொதுமக்கள் பலரும் பயன்பெறும் வகையில் இரத்த அழுத்தம் (BP), சர்க்கரை நோய் அளவு (Sugar), கொழுப்பு அளவு (Cholesterol), கண் பரிசோதனை, காது-மூக்கு-தொண்டை (ENT), தோல் நோய் மற்றும் எலும்பு தொடர்பான தீவிர பரிசோதனைகள் இங்கு விரிவாகச் செய்யப்பட்டன.

முகாமிற்கு வருகை தந்த அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் சார்பில் காலை உணவு, சமோசா, டீ, காபி மற்றும் குளிர்பானங்கள் அன்புடன் வழங்கப்பட்டன. தமிழக மக்கள் மட்டுமின்றி, குவைத்தில் வசிக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிற மொழி மக்களும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Kuwait

இந்நிகழ்வில் உள்ளூர் தொழிலதிபர்கள், பல்வேறு இயக்கங்கள் மற்றும் அரசியல் அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். இறுதியாக, மண்டல துணைச் செயலாளர் நாகை இப்றாஹிம் நன்றியுரை ஆற்றினார். குவைத்தில் இந்த முகாம் வெற்றிகரமாக நடைபெற உழைத்த நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

English summary

Kuwait: Over 300 Expats Benefit from Humanitarian Cultural Association Free Medical Camp in Salmiya

Read More

Previous Post

போலி களைநாசினிகளால் வீழ்ச்சியடையும் நெல் விளைச்சல்: ரவிகரன் எம்.பி கொந்தளிப்பு

Next Post

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாதம் ரூ.12,500 முதலீடு; 21 ஆண்டுகளுக்கு பின் எவ்வளவு கிடைக்கும்?

Next Post
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாதம் ரூ.12,500 முதலீடு; 21 ஆண்டுகளுக்கு பின் எவ்வளவு கிடைக்கும்?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாதம் ரூ.12,500 முதலீடு; 21 ஆண்டுகளுக்கு பின் எவ்வளவு கிடைக்கும்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin