• Login
Thursday, October 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

நடைமுறை என்ன? அஜித் அகர்கர் விலகிய நிலையில் ரவீந்திர ஜடேஜா கேட்ட கேள்வி | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 8, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
நடைமுறை என்ன? அஜித் அகர்கர் விலகிய நிலையில் ரவீந்திர ஜடேஜா கேட்ட கேள்வி | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 08, 2026 6:04 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாளர் பதவியிலிருந்து அஜித் அகர்கர் விலகிய நிலையில், புதிய விண்ணப்ப நடைமுறை குறித்து வீரர் ரவீந்திர ஜடேஜா நகைச்சுவையாக கேள்வி எழுப்பியுள்ளார்.

அஜித் அகர்கர் - ரவிந்திர ஜடேஜா
அஜித் அகர்கர் – ரவிந்திர ஜடேஜா

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாளர் பதவியிலிருந்து அஜித் அகர்கர் விலகிய பின் பிசிசிஐ அப்பதவிக்கு விண்ணப்பங்களை வெளியிட்ட நிலையில், ரவீந்திர ஜடேஜா அந்த செயல்முறை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய அணியில் விளையாடும் வீரர் ஒருவர் அந்த பதவிக்கு விண்ணப்பிக்க முடியுமா என்பதும் குறித்தும் தற்போது பார்க்கலாம்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் பணியாற்றி வந்தார். 2023 முதல் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாளர் பதவியில் வெற்றிகரமாகப் பணியாற்றிய அஜித் அகர்கர், தற்போது அப்பதவியிலிருந்து முறைப்படி விலகியுள்ளார். அஜித் அகர்கர் அந்த பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, பிசிசிஐ புதிய விண்ணப்பங்களுக்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதனிடையே இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இந்த பதவி குறித்த கேள்வி ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

இந்திய அணியின் தலைமைத் தேர்வாளர் காலிப் பணியிடத்திற்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட நிலையில், அப்பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறையை அறிய விரும்பி, ரவீந்திர ஜடேஜா நகைச்சுவையாக கேள்வி எழுப்பினார். “இதற்கான செயல்முறை என்ன?” என்று அவர் பிசிசிஐ-யின் அதிகாரப்பூர்வ பதிவிற்குப் பதிலளித்தார்.

ரவீந்திர ஜடேஜாவின் இந்த கேள்வியால் உண்மையிலேயே தலைமைத் தேர்வாளர் பதவிக்கு அவரால் விண்ணப்பிக்க முடியுமா? என்ற கேள்வியும் எழலாம். பிசிசிஐ விதிகளின்படி, தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு கிரிக்கெட் வீரர் எந்தவொரு நிர்வாக அல்லது தேர்வுக் குழுப் பதவியையும் வகிக்க முற்றிலும் தகுதியற்றவர் ஆவார். தலைமைத் தேர்வாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர், குறிப்பிடத்தக்க சர்வதேச விளையாட்டு அனுபவத்தைப் பெற்றிருப்பதோடு, அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடதக்கது.

ரவீந்திர ஜடேஜா 2024 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார், ஆனால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் வடிவங்களில் இன்னும் விளையாடி வருகிறார், மேலும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் விளையாடுகிறார் . எனவே, அவர் தேவையான தகுதிகளைப் பூர்த்தி செய்வதிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறார். ரவீந்திர ஜடேஜா மட்டுமின்றி ஐபிஎல் உள்ளிட்ட போட்டிகளில் மட்டும் விளையாடும் வீரர்கள் ஓய்வு பெற்று 5 வருடங்கள் மட்டுமே இதுப்போன்ற பதிவிக்கு விண்ண்பிக்க முடியும்.

அஜித் அகர்கர் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாளராக ஒரு வெற்றிகரமான பதவிக்காலத்தைக் கொண்டிருந்தார். 2024 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைகள் மற்றும் 2025-ஆம் ஆண்டில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி என, தொடர்ச்சியாக மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற அணிகளை அவர் தேர்ந்தெடுத்தார். மேலும், 2023 ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணியையும் அவரே தேர்ந்தெடுத்தார். தற்போது அஜித் அகர்கருக்கு பின்னர் அந்த பதவிக்கு யார் வருவார்கள் என்பது தான் பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

Read More

Previous Post

“அதிகாரிகளுக்கு பயம் இல்லாமல் போய்விட்டது”.. கோவில் சொத்துகள் தொடர்பான வழக்கில் ஐகோர்ட் கிளை காட்டம் | Temple Property Irregularities: Madurai HC Expresses Anguish Over Officials’ Conduct

Next Post

அவுஸ்திரேலியாவில் 6 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கை வம்சாவளி பிக்குவுக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை – Sri Lanka Tamil News

Next Post
அவுஸ்திரேலியாவில் 6 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கை வம்சாவளி பிக்குவுக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை – Sri Lanka Tamil News

அவுஸ்திரேலியாவில் 6 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கை வம்சாவளி பிக்குவுக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin