Last Updated:
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், அரசியலமைப்பு அமைப்புகளை விமர்சிப்பது குறித்து முன்னாள் நீதிபதிகள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் உட்பட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் டெல்லியில் தொடர் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். கடந்த 6ஆம் தேதி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி சென்ற நிலையில், ஆகாஷ்வானி வளாகத்தின் அருகே தடுத்து நிறுத்தப்பட்டு பின் இரவு கைது செய்யப்பட்டனர். இதேபோல் நேற்று (7ஆம் தேதி) ஜந்தர் மந்தர் நோக்கி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணி செல்ல முயன்றபோது அவர்களை தடுத்து காவல்துறை கைது செய்தது.
இந்நிலையில் இன்று மூன்றாவது நாளாக மகாத்மா காந்தி நினைவு இடத்தை நோக்கி பேரணி செல்ல இந்தியா கூட்டணியினர் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதற்காக இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டுவிட்டு, புறப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முன்னாள் நீதிபதிகள் 42 பேர் இணைந்து ‘நாட்டு மக்களுக்கு ஒரு திறந்த மடல்’ என மூன்று பக்கக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில், தேர்தல் ஆணையம், நீதித்துறை மற்றும் பிற அரசியலமைப்பு சார்ந்த நிறுவனங்களின் செயல்பாடுகளைச் சீர்குலைக்கும் முயற்சிகள் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
In an open letter, 42 former judges have expressed grave concern over attempts to undermine the Election Commission, judiciary and other constitutional institutions.
The signatories have questioned allegations of “vote theft” without supporting evidence, warning that repeatedly branding constitutional authorities as “thieves” and “compromised” risks eroding public trust in democracy.“Criticism of institutions is a democratic right. Denigration is not,” the letter states.
— Press Trust of India (@PTI_News) October 8, 2026
மேலும் அந்தக் கடிதத்தில், ஆதாரமற்ற “வாக்குத் திருட்டு” குற்றச்சாட்டுகள் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ள அவர்கள், அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகளைத் தொடர்ந்து “திருடர்கள்” என்றும் “சமரசம் செய்துகொண்டவர்கள்” என்றும் முத்திரை குத்துவது, ஜனநாயகத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் அபாயத்தை உருவாக்குகிறது என்று எச்சரித்துள்ளனர். குறிப்பாக, “இந்தியாவின் அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள் தொடர்ச்சியான தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. இந்தத் தாக்குதலின் மையப்புள்ளியாக இந்தியத் தேர்தல் ஆணையம் உள்ளது. நாங்கள் மிகுந்த மரியாதையுடன் கருதும் உயர் நீதிமன்றங்கள் மற்றும் சட்டரீதியான அமைப்புகள் கூட இதிலிருந்து தப்பவில்லை” என்றும், “நிறுவனங்களை விமர்சிப்பது ஒரு ஜனநாயக உரிமை. ஆனால் அவற்றை இழிவுபடுத்துவது அவ்வாறல்ல” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.


