• Login
Thursday, October 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நான் நெனச்சா polling-யே நிறுத்திவிடுவேன்! பார்க்குறீங்களா? திமுக கிளைச் செயலாளர் உதார் | Maduranthagam DMK activist says that if reporters are not outsted, I will stop the election

GenevaTimes by GenevaTimes
October 8, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
நான் நெனச்சா polling-யே நிறுத்திவிடுவேன்! பார்க்குறீங்களா? திமுக கிளைச் செயலாளர் உதார் | Maduranthagam DMK activist says that if reporters are not outsted, I will stop the election
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Vishnupriya R

Time
Published: Tuesday, October 6, 2026, 13:07 [IST]

மதுராந்தகம்: மதுராந்தகம் இடைத்தேர்தல் வாக்கு பதிவின் போது பழமத்தூர் வாக்குச் சாவடி மையத்தில், “பத்திரிகையாளர்களை வெளியே அனுப்பாவிட்டால் வாக்குப் பதிவையே நிறுத்திவிடுவேன்” என திமுக கிளை செயலாளர் உதார் விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளின் எம்எல்ஏக்களாக மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் அதிமுக சார்பில் வென்றனர். இந்த நிலையில் தேர்தல் நடந்த 3 மாதங்களுக்குள் அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

maduranthagam dmk

இதையடுத்து இரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டு இன்று இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், அதிமுக சார்பில் கணிதா சம்பத், திமுக சார்பில் பரந்தாமன், மார்க்சிஸ்ட் சார்பில் சுகந்தி, நாதக சார்பில் ஜானகிராமன், சுயேச்சைகள் என மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

மதுராந்தகம் வாக்காளர்கள்

மதுராந்தகம் தொகுதியில் 285 வாக்குச்சாவடிகள் உள்ளன. அங்கு 2.13 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 1,04,926, பெண்கள்- 1,08,797 ஆவர். இன்று காலை மதுராந்தகத்தில் வாக்குப் பதிவு தொடங்கியது. மாலை 6 மணிக்கு முடிவடைகிறது.

இந்த நிலையில் மதுராந்தகம் தொகுதியில் பழமத்தூர் வாக்குச் சாவடிக்கு வந்த திமுக கிளைச் செயலாளர் ஒருவர் “பத்திரிகையாளர்கள் இங்கிருந்து வெளியே செல்லாவிட்டால் தேர்தலையே நிறுத்திவிடுவேன்” என்றார். அப்போது அவருடன் வந்த ஒருவர், அந்த கிளைச் செயலாளரிடம் , “அப்படியெல்லாம் பேசாதே, அவர்கள் அவர்களின் வேலையை செய்கிறார்கள்” என்றார்.

ஆளும் கட்சி

அதற்கு அந்த கிளைச் செயலாளர் “இவங்கலாம் ஆளும் கட்சியோட ஆளுங்கப்பா” என்றார். அப்போது அங்கிருந்த நிருபர் ஒருவர், “நீங்கள் எப்படி அப்படி சொல்லலாம், எதை வைத்து நாங்கள் தவெக ஆட்கள் என்கிறீர்கள், எங்களை வெளியே போக சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை, தேர்தல் நடத்தும் அதிகாரி சொல்லட்டும்” என்றார்.

கிளைச் செயலாளர்

இதையடுத்து கிளைச் செயலாளரை அங்கிருந்து அவருடன் வந்த ஒருவர் அழைத்துச் சென்றார். அப்போது போலீஸாரிடமும் இதே போல் ஏதோ வாக்குவாதம் செய்து நான் திமுக கிளைச் செயலாளர் என உதார் விட்டபடி சென்றார்.

அது போல் மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவின் போது பள்ளிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அதிமுகவை சேர்ந்த ஒருவர் தனது கட்சித் துண்டு அணிந்து கொண்டு வாக்களிக்க வந்தார். அப்போது அவரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர் போலீஸாருடன் வாக்குவாதம் செய்தார்.

துண்டு போடக் கூடாதா?

“என்னை ஏன் தடுக்குறீங்க, துண்டு போடக் கூடாதுனு ரூல்ஸ் இல்லை, அப்போ நான் கரை வேட்டி கட்டியிருக்கிறேனே அதை அவுத்து போட்டுட்டு உள்ளே போகட்டுமா? கட்சிக்காரன் எப்படி இருப்பான், கரை வேட்டி, கட்சி துண்டுடன்தானே இருப்பான், நான் எம்ஜிஆர் மன்ற கிளைக் கழக செயலாளர். ஊர்ல நான்தான் பெரிய மனுஷன். எம்ஜிஆர் என்னை கட்டிபிடித்தவர், நீங்கள் என்னை டார்ச்சர் செய்கிறீர்கள்.

வாக்குப் பதிவு

வாக்கு பதிவு இயந்திரம் ஒழுங்காக வேலை செய்கிறதா என்றெல்லாம் நான் பார்க்க வேண்டும்” என்றார். பிறகு துண்டுடன் முன்னேற முயன்ற போது போலீஸார் மீண்டும் தடுத்ததால் துண்டை நீக்கிவிட்டு உள்ளே சென்றார். அப்போது அவரது பாக்கெட்டில் போன் இருந்தது. அதை போன் சேகரிக்கும் மையத்தில் ஒப்படைத்துவிட்டு செல்லுங்கள் என சொன்ன போதும் அவர் மீறி உள்ளே சென்றார். பிறகு அவரது பாக்கெட்டில் இருந்த போனை போலீஸார் பறிமுதல் செய்துவிட்டு உள்ளே அனுப்பினர். இப்படியாக அதிமுக, திமுக கிளைச் செயலாளர்கள் அலப்பறையில் ஈடுபட்டனர்.

English summary

Maduranthagam DMK activist says that if reporters are not outsted, I will stop the election. Reporters are belongs to TVK, he claims.

Read More

Previous Post

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா முன்வைத்துள்ள முத்தரப்பு அமைதித் திட்டம் – Sri Lanka Tamil News

Next Post

பிரேமானந்த் மகாராஜ் ஆசிரமத்துக்கு செல்ல ரூ.5 கோடி பெற்றாரா விராட் கோலி..? வெளியான தகவலுக்கு விளக்கம்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post
பிரேமானந்த் மகாராஜ் ஆசிரமத்துக்கு செல்ல ரூ.5 கோடி பெற்றாரா விராட் கோலி..? வெளியான தகவலுக்கு விளக்கம்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

பிரேமானந்த் மகாராஜ் ஆசிரமத்துக்கு செல்ல ரூ.5 கோடி பெற்றாரா விராட் கோலி..? வெளியான தகவலுக்கு விளக்கம்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin