• Login
Thursday, October 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

RBI எபெக்ட்: வீட்டு கடன் வாங்கியவர்களின் ரூ.20000 EMI.. யாருக்கு எவ்வளவு உயரும்..? முழு விளக்கம்! | RBI Repo Rate Hike to 5.50%: How Much Will Your Home Loan EMI Increase? Check Complete Breakdown

GenevaTimes by GenevaTimes
October 8, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
RBI எபெக்ட்: வீட்டு கடன் வாங்கியவர்களின் ரூ.20000 EMI.. யாருக்கு எவ்வளவு உயரும்..? முழு விளக்கம்! | RBI Repo Rate Hike to 5.50%: How Much Will Your Home Loan EMI Increase? Check Complete Breakdown
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


RBI எபெக்ட்: வீட்டு கடன் வாங்கியவர்களின் ரூ.20000 EMI.. யாருக்கு எவ்வளவு உயரும்..? முழு விளக்கம்!

ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை 0.25 சதவீதம் அதிகரித்து 5.50 சதவீதமாக உயர்த்திய பின்பு அடுத்தடுத்து அனைத்து வங்கிகளும், தனது வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிக்கும். இதனால் வீட்டுக் கடன் வாங்கியவர்களின் ஈஎம்ஐ எவ்வளவு உயரும் என்பது சாமானிய மக்களின் முக்கியமான கேள்வியாக இருந்து வருகிறது.

ரிசர்வ் வங்கி கிட்டத்தட்ட 4 வருடத்திற்குப் பின்பு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதால், தொடர்ந்து வட்டி குறைப்பு மூலம் பலன் அடைந்த மக்கள் இனி வரும் மாதங்களில் கூடுதல் ஈஎம்ஐ செலுத்த வேண்டியிருக்கும்.

RBI எபெக்ட்: வீட்டு கடன் வாங்கியவர்களின் ரூ.20000 EMI.. யாருக்கு எவ்வளவு உயரும்..? முழு விளக்கம்!

வீட்டுக் கடன்

ஒவ்வொரு வங்கியும் வாடிக்கையாளரின் சிபில் ஸ்கோருக்கு ஏற்றப்படி, கடன் தொகைக்கு ஏற்றப்படி வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்து கடன் வழங்குகிறது. இதனால் அனைத்து வீட்டுக் கடன்களுக்கும் ஓரே மாதிரியான வட்டி விகிதம் இருக்காது.

இதேபோல் ஆர்பிஐ இன்று அறிவித்த வட்டி விகித உயர்வு வீட்டு கடன் வாங்கியவர்களை இரண்டு வகையில் பாதிக்கலாம், வாடிக்கையாளரின் கிரெடிட் ப்ரொபைல்-க்கு ஏற்ப வங்கிகள் கடன் காலத்தை அதிகரித்து இந்த வட்டி விகித உயர்வைச் சமன் செய்யலாம், அல்லது ஒவ்வொரு மாதமும் செலுத்தும் ஈஎம்ஐ தொகையில் மாற்றம் செய்யலாம். இது முழுக்க முழுக்க வங்கிகள் எடுக்கும் முடிவு என்பதால் ஹோம் லோன் வாங்கிய ஒவ்வொரு வாடிக்கையாளரும் இதைக் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த ஈஎம்ஐ மாற்றம் ஏற்கனவே கடன் வாங்கியவர்களுக்கும், ஹோம் லோன் வாங்கி ஒரு வருடம் முடிந்தவர்களுக்கு மட்டுமே மாறும். புதிதாக கடன் வாங்குவோருக்கு புதிய வட்டி விகிதத்தில் கடனை வங்கிகள் வழங்கும்.

ஈஎம்ஐ எவ்வளவு உயரும்..

8.00 சதவீத வட்டியில் 20 வருடம் ஹோம் லோன் வாங்கியவரின் ஈஎம்ஐ எவ்வளவு உயரும் என்பதை இப்போது பார்ப்போம்.

25 லட்சம் ரூபாய் நிலுவைத் தொகை கொண்ட ஒரு நபர் தற்போது மாதம் 20,911 ரூபாய் ஈஎம்ஐ செலுத்தினால் புதிய வட்டியான 8.25 சதவீத வட்டியின் கீழ் 21,295.41 ரூபாய் ஈஎம்ஐ செலுத்த வேண்டும். இதன் மூலம் ஒருவரின் வட்டி 384.41 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது.

இதேபோல் 1 கோடி ரூபாய் நிலுவைத் தொகை கொண்ட ஒரு நபரின் ஹோம் லோன் ஈஎம்ஐ 1,537.64 ரூபாய் அதிகரிக்கும், அதாவது 83,644.01 ரூபாய் ஈஎம்ஐ தொகை 85,181.64 ரூபாயாக உயர்வும்.

மேலும் 50 லட்சம் கடன் வைத்துள்ளவர்கள் 768.82 ரூபாயும், 75 லட்சம் கடன் வைத்துள்ளவர்கள் 1,153.23 ரூபாயும், 1.25 கோடி கடன் நிலுவை வைத்துள்ளவர்கள் 1,922.05 ரூபாய் கூடுதலாகச் செலுத்த வேண்டியிருக்கும்.

வீட்டுக்கடன் 8 சதவீத்தில் இருந்து 8.25 சதவீதம் மாறும்போது ஈஎம்ஐ தொகையில் ஏற்படும் வித்தியாசத்தின் முழு விபரம்

நிலுவை கடன் தொகை 8%ல் ஈஎம்ஐ 8.25%ல் ஈஎம்ஐ ஈஎம்ஐ வித்தியாசம்
ரூ.25 லட்சம் ரூ.20,911.00 ரூ.21,295.41 ரூ.384.41
ரூ.50 லட்சம் ரூ.41,822.00 ரூ.42,590.82 ரூ.768.82
ரூ.75 லட்சம் ரூ.62,733.01 ரூ.63,886.23 ரூ.1,153.23
ரூ.1 கோடி ரூ.83,644.01 ரூ.85,181.64 ரூ.1,537.64
ரூ.1.25 கோடி ரூ.1,04,555.01 ரூ.1,06,477.06 ரூ.1,922.05
ரூ.1.50 கோடி ரூ.1,25,466.01 ரூ.1,27,772.47 ரூ.2,306.46
ரூ.1.75 கோடி ரூ.1,46,377.01 ரூ.1,49,067.88 ரூ.2,690.87
ரூ.2 கோடி ரூ.1,67,288.01 ரூ.1,70,363.29 ரூ.3,075.28

8.25% vs 8.50% EMI வித்தியாசம்

நிலுவை கடன் தொகை 8.25%ல் ஈஎம்ஐ 8.50%ல் ஈஎம்ஐ ஈஎம்ஐ வித்தியாசம்
ரூ.25 லட்சம் ரூ.21,295.41 ரூ.21,682.16 ரூ.386.75
ரூ.50 லட்சம் ரூ.42,590.82 ரூ.43,364.31 ரூ.773.49
ரூ.75 லட்சம் ரூ.63,886.23 ரூ.65,046.47 ரூ.1,160.24
ரூ.1 கோடி ரூ.85,181.64 ரூ.86,728.63 ரூ.1,546.99
ரூ.1.25 கோடி ரூ.1,06,477.06 ரூ.1,08,410.78 ரூ.1,933.72
ரூ.1.50 கோடி ரூ.1,27,772.47 ரூ.1,30,092.94 ரூ.2,320.47
ரூ.1.75 கோடி ரூ.1,49,067.88 ரூ.1,51,775.10 ரூ.2,707.22
ரூ.2 கோடி ரூ.1,70,363.29 ரூ.1,73,457.25 ரூ.3,093.96

7.75% Vs 8.00% ஈஎம்ஐ வித்தியாசம்

நிலுவை கடன் தொகை 7.75%ல் ஈஎம்ஐ 8.00%ல் ஈஎம்ஐ ஈஎம்ஐ வித்தியாசம்
ரூ.25 லட்சம் ரூ.20,523.71 ரூ.20,911.00 ரூ.387.29
ரூ.50 லட்சம் ரூ.41,047.43 ரூ.41,822.00 ரூ.774.57
ரூ.75 லட்சம் ரூ.61,571.14 ரூ.62,733.01 ரூ.1,161.87
ரூ.1 கோடி ரூ.82,094.86 ரூ.83,644.01 ரூ.1,549.15
ரூ.1.25 கோடி ரூ.1,02,618.57 ரூ.1,04,555.01 ரூ.1,936.44
ரூ.1.50 கோடி ரூ.1,23,142.28 ரூ.1,25,466.01 ரூ.2,323.73
ரூ.1.75 கோடி ரூ.1,43,666.00 ரூ.1,46,377.01 ரூ.2,711.01
ரூ.2 கோடி ரூ.1,64,189.71 ரூ.1,67,288.01 ரூ.3,098.30

வங்கிகளின் முடிவு

மேலும் இந்த வட்டி விகித உயர்வு என்பது ஆர்பிஐ அறிவித்த 0.25 சதவீதத்தையும் முழுமையாக வாடிக்கையாளர் தலையில் வங்கிகள் வைக்காது, வங்கிகள் தங்களுடைய நிதி நிலை, வர்த்தக போட்டி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு குறைவான வட்டி விகிதத்தையும் உயர்த்தலாம் அல்லது அறிவிக்கப்பட்ட 0.25 சதவீதத்தைத் தாண்டியும் அறிவிக்கலாம்.

இந்த மாற்றத்தை அடுத்த 1-2 வாரங்களில் வங்கிகள் நடைமுறைக்குக் கொண்டு வரலாம். இதனால் அடுத்த மாதம் ஈஎம்ஐ முதல் புதிய ஈஎம்ஐ தொகை செலுத்த வேண்டிய கட்டாயம்.

EBLR Vs MCLR

மேலும் EBLR எனப்படும் External Benchmark Linked Rate கீழ் ஹோம் லோன் பெற்றவர்களின் ஈஎம்ஐ வட்டி விகிதம் உடனடியாக உயரும், ஆனால் MCLR கீழ் கடன் பெற்றுள்ளவர்களுக்கு வங்கிகள் எடுக்கும் முடிவுகளுக்கு ஏற்பட 1-2 வாரத்தில் புதிய வட்டி விகிதம் நடைமுறைக்கு வந்து ஈஎம்ஐ உயர்த்தப்படும்.

EBLR என்பது ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் போன்ற வெளிப்புற காரணிகளுடன் நேரடியாகத் தொடர்புடைய ஒரு கடன் திட்டமாகும். இதனால் ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை உயர்த்திய உடனே, இந்தத் திட்டத்தில் கீழ் கடன் வாங்கியவர்களின் வட்டி விகிதமும் தானாகவே மற்றும் தன்மை கொண்டவை.

ஆனால் MCLR என்பது வங்கியின் சொந்த நிதிச் செலவுகள் அடிப்படையில் கணக்கிடப்படும் வட்டி விகித நிர்ணயம் செய்யும் கட்டமைப்பைக் கொண்டது. உதாரணமாக, வங்கிகள் டெபாசிட்டுக்கு தரும் வட்டி, ஆர்பிஐ-யிடம் இருந்து வாங்கும் கடன் ஆகியவற்றைக் கணக்கிட்டு லாப அளவுகள் ஆய்வு செய்து அதன் பின்பு புதிய வட்டி விகிதத்தைக் கொண்டு வரும்.

Share This Article

English summary

RBI Repo Rate Hike to 5.50%: How Much Will Your Home Loan EMI Increase? Check Complete Breakdown

RBI Repo Rate Hike to 5.50%: How Much Will Your Home Loan EMI Increase? Check Complete Breakdown — RBI எபெக்ட்: வீட்டு கடன் வாங்கியவர்களின் ரூ.20000 EMI.. யாருக்கு எவ்வளவு உயரும்..? முழு விளக்கம்!

Story first published: Wednesday, October 7, 2026, 12:08 [IST]

Read More

Previous Post

PM Modi 25 Years | பொது வாழ்க்கையில் 25 ஆண்டுகள் நிறைவு.. பிரதமர் மோடி இதுவரை சாதித்தது என்ன? | India News (இந்தியா செய்திகள்)

Next Post

இந்தோனேசியாவில் மிக தீவிரமான காட்டுத் தீ… புகை மண்டலமாக காட்சியளிக்கும் மலேசியா! | World News (உலக செய்திகள்)

Next Post
இந்தோனேசியாவில் மிக தீவிரமான காட்டுத் தீ… புகை மண்டலமாக காட்சியளிக்கும் மலேசியா! | World News (உலக செய்திகள்)

இந்தோனேசியாவில் மிக தீவிரமான காட்டுத் தீ... புகை மண்டலமாக காட்சியளிக்கும் மலேசியா! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin