Last Updated:
மரணத்தின் விளிம்பு வரை சென்று உயிர் பிழைத்த நாயை, அப்பகுதி மக்கள் வாஞ்சையுடன் அணைத்துக் கொண்டனர்.
தென் அமெரிக்க நாடான சிலியில் ஆர்ப்பரித்த வெள்ளத்தில் சிக்கிய இந்த நாய், கடுமையான போராட்டத்திற்குப் பிறகு உயிர் பிழைத்தது.
சிலி நாட்டில் அண்மைநாட்களாக பெய்து வரும் மிகக் கடுமையான கனமழை காரணமாக, தலைநகர் சாண்டியாகோ வழியாகச் செல்லும் மபோசோ ஆற்றில் திடீரென அபாயகரமான அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்ததால், ஆற்றின் நடுவே இருந்த கான்கிரீட் தடுப்புச் சுவர் போன்ற ஒரு பகுதியில் ஆதரவற்ற நாய் ஒன்று மாட்டிக்கொண்டன. தகவல் அறிந்து சென்ற மீட்பு படையினர், நாயை மீட்க தீவிர முயற்சி மேற்கொண்டனர்.
A stray dog named Morocho survived multiple failed rescue attempts and was swept through dangerous floodgates before emerging safely from Chile’s swollen Mapocho River https://t.co/CScXfildlm
— Reuters (@Reuters) October 7, 2026
இதற்கிடையே பல இடங்களில் வெள்ளத்தில் இருந்து தப்பிய நாய், வெளியேறுவதற்கு வழியின்றி மீண்டும் நீரில் அடித்து செல்லப்பட்டது. ஒரு வழியாக, நீண்ட போராட்டத்திற்கு பிறகு, நாய் உயிருடன் கரை ஏறியது. மரணத்தின் விளிம்பு வரை சென்று உயிர் பிழைத்த நாயை, அப்பகுதி மக்கள் வாஞ்சையுடன் அணைத்துக் கொண்டனர்.

