• Login
Wednesday, October 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தர்மபுரி மக்களின் 85 ஆண்டு கால கனவு.. சென்னை ரயில் இணைப்புக்கு புதிய அப்டேட்.. ஆனால் ஒரு சிக்கல் | Dharmapuri 85 year Dream.. Chennai Railway Link Gets a New Update.. But There’s One Problem

GenevaTimes by GenevaTimes
October 7, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
தர்மபுரி மக்களின் 85 ஆண்டு கால கனவு.. சென்னை ரயில் இணைப்புக்கு புதிய அப்டேட்.. ஆனால் ஒரு சிக்கல் | Dharmapuri 85 year Dream.. Chennai Railway Link Gets a New Update.. But There’s One Problem
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Hema Vandhana

Time
Updated: Wednesday, October 7, 2026, 15:10 [IST]

தர்மபுரி: தர்மபுரியை சென்னையுடன் இணைக்கத் தேவையான மொரப்பூர் – ராணி மூக்கனூர் ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தேவைப்படும் நிலங்களை போர்க்கால அடிப்படையில் கையகப்படுத்திக் கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.. 26.19 ஹெக்டேர் தனியார் பட்டா நிலத்தைக் கையகப்படுத்தும் செயல்முறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதே, அடுத்தகட்ட பணிகளை இன்னும் தொடங்க முடியாமல் போனதற்குக் காரணம் என்றும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், “தருமபுரி – மொரப்பூர் இடையே 38 கி.மீ நீளத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தின் முதல் கட்டமாக மொரப்பூர் முதல் ராணி மூக்கனூர் வரை 10.221 கி.மீ தொலைவுக்கு புதிய பாதை அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை ரயில்வே அமைச்சகம் கோரியுள்ளது. இதன் மூலம் தருமபுரி மாவட்ட மக்களின் 85 ஆண்டு கால கனவை நனவாக்கும் பணிகள் தொடங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

Dharmapuri Railway Link Chennai Railway Link Dharmapuri Railway Project 85

தர்மபுரி – மொரப்பூர் ரயில்பாதை திட்டம்

தர்மபுரி – மொரப்பூர் ரயில்பாதை திட்டம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான திட்டம் ஆகும். 2019-ம் ஆண்டு மார்ச் 4-ம் தேதி எனது முன்னிலையில் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பின் 7 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், இதுவரை ரயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்படாத நிலையில், அதன் ஒரு பகுதிக்கு இப்போது ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகும்.

மீதமுள்ள 28 கி.மீ தொலைவில் 8 கி.மீ நீள பாதையில் சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதால் நிலங்களை கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

நிலங்கள் கையகப்படுத்துதல்

இத்திட்டத்திற்கு தேவையான 93.11 ஹெக்டேர் நிலங்களில் 46.79 நிலங்கள் கையகப்படுத்தித் தரபட்டுள்ளன. தனியார் பட்டா நிலங்களில் 26.19 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தான் அடுத்தக்கட்ட பணிகளை இன்னும் தொடங்க முடியாததற்கு காரணம் ஆகும்.

ஒரு மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அந்த மாவட்டத்தின் தலைநகரம் மாநிலத் தலைநகருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். அந்த வகையில் தர்மபுரியை சென்னையுடன் இணைக்கத் தேவையான இந்தத் திட்டத்தை செயல்படுத்த வசதியாக அதற்கு தேவைப்படும் நிலங்களை போர்க்கால அடிப்படையில் கையகப்படுத்திக் கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

தர்மபுரி மக்கள் கனவு நிறைவேறும்

டாக்டர் அன்புமணியின் இந்த கோரிக்கை மிகுந்த கவனம் பெற்றுள்ளது.. ஏனென்றால். தர்மபுரி – மொரப்பூர் ரயில் பாதை முழுமையாக அமைந்தால், தருமபுரி மக்களுக்கு சென்னைக்கான ரயில் இணைப்பு இன்னும் எளிதாகும். இப்போது தருமபுரி வழியாக ஏற்கனவே ரயில் பாதைகள் இருந்தாலும், மொரப்பூர் வழியாக புதிய இணைப்பு கிடைத்தால் பயண வழித்தடம் மேம்படும்.

முக்கியமாக வேலை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்காக சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் மக்கள் நிறையவே பயன்பெற வாய்ப்பு உள்ளது… சரக்கு போக்குவரத்துக்கும் இந்த பாதை உதவக்கூடும் என்பதால், மாவட்டத்தின் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் இது ஒரு கூடுதல் வாய்ப்பாக அமையலாம்.

மிகப்பெரிய சிக்கல் இதுதான்

ஆனால், இந்த திட்டத்தில் பெரிய சிக்கலாக இருப்பது நிலம் கையகப்படுத்துவதுதான்.. மொரப்பூர் – தர்மபுரி புதிய ரயில் பாதை மொத்தம் சுமார் 36 கி.மீ. நீளம் கொண்டது. இதற்காக தேவைப்படும் 93 ஹெக்டேருக்கும் அதிகமான நிலத்தில் ஒரு பகுதி கையகப்படுத்தப்பட்டுவிட்டாலும், மீதமுள்ள நிலம் தொடர்பான பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை.

குறிப்பாக தனியார் பட்டா நிலங்களை கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அடுத்தகட்ட பணிகள் தாமதமாகி வருகின்றன. நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், டெண்டர் விடப்பட்ட பகுதிகளிலும் பணிகள் வேகமாக முன்னேறுவது சிரமமாகிவிடும்.

மக்களின் வாழ்வாதாரம்

இதில் இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது.. ரயில் பாதை அமைந்தால் பலன் கிடைக்கும் என்றாலும், நிலத்தை இழக்கும் மக்களின் வாழ்வாதாரமும் கவனிக்கப்பட வேண்டியிருக்கிறது. ஏற்கனவே சில பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்களுடைய நிலம், விவசாயம் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம் என்று நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்…

இதனால் அரசு ஒருபக்கம் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும், இன்னொரு பக்கம் நிலம் கொடுக்கும் மக்களின் நியாயமான இழப்பீடு மற்றும் வாழ்வாதார பிரச்சினைகளையும் சமாளிக்க வேண்டிய நிலை உள்ளது. அதனால், அன்புமணி கேட்கும் வேகமான நிலம் கையகப்படுத்துதல் நடந்தால், இந்த திட்டம் முன்னேற நிறையவே வாய்ப்புள்ளது..

ஆனால் பாதிக்கப்படும் நில உரிமையாளர்களின் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு காண்பதுதான் முக்கியமான சவாலாக இருக்கும்… எப்படியிருந்தாலும், இந்த திட்டம் நிறைவேறி தர்மபுரி மக்களுக்கு உண்மையான நன்மை கிடைத்தால் அதுவே முக்கியம்..!!!

English summary

Dharmapuri 85 year Dream.. Chennai Railway Link Gets a New Update.. But There’s One Problem

Read More

Previous Post

முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அதிரடி கைது!

Next Post

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ கைது – Sri Lanka Tamil News

Next Post
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ கைது – Sri Lanka Tamil News

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ கைது - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin