• Login
Wednesday, October 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தொற்றால் ஆய்வக ஊழியர் மரணம்: 200 பேரை ரஷ்யா தனிமைப்படுத்தியது! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 7, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தொற்றால் ஆய்வக ஊழியர் மரணம்: 200 பேரை ரஷ்யா தனிமைப்படுத்தியது! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
ஐரோப்பா
/
தொற்றால் ஆய்வக ஊழியர் மரணம்: 200 பேரை ரஷ்யா தனிமைப்படுத்தியது!

சைபீரியாவில் ஆய்வக ஊழியர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பிளேக் நோய் அச்சம் காரணமாக 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வைத்தியக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.


ரஷ்யாவின் சைபீரியா பிராந்தியத்தில் அமைந்துள்ள தொற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வகப் பெண் ஊழியர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சுமார் 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர வைத்தியக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 

உயிரிழந்தவர் தனது பணியின்போது நியூமோனிக் பிளேக் எனப்படும் சுவாசப்பை பிளேக் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுந்த நிலையிலேயே, இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சைபீரியா மற்றும் தூரக் கிழக்கு பிராந்தியத்துக்கான இர்குட்ஸ்க் பிளேக் தடுப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றி வந்த 28 வயதான டர்யா தர்யா ஷிபிலோவா ( Darya Shipilova) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இவர் கடந்த செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி பணியில் இருந்தபோது சுகவீனமுற்றதாகவும், அதன் பின்னர் ஷெலிகோவ் பகுதியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்,டு இரு தினங்களின் பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாகவும் சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆய்வகத்தில் பரிசோதனைக் குழாய் உடைந்ததில் ஏற்பட்ட விபத்தின் காரணமாகவே அவர் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என சில உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்ட போதிலும், ரஷ்ய அதிகாரத்தரப்பு அதனை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

இந்த உயிரிழப்பைத் தொடர்ந்து, குறித்த பெண்ணுடன் நேரடி தொடர்பில் இருந்ததாகக் கண்டறியப்பட்ட சுமார் 200 பேர் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டதுடன், அவர் சிகிச்சை பெற்று உயிரிழந்த வைத்தியசாலையின் சில பகுதிகள் முற்றாக முடக்கப்பட்டு பாதுகாப்பு வலையமைப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. 

அத்துடன், அருகிலுள்ள அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசங்களை அணியுமாறு பணிக்கப்பட்டுள்ளனர். 

இருப்பினும், அவர் ஆய்வகத்தில் கையாண்ட நோய்க்கிருமிகளால் இந்தப் பாதிப்பு ஏற்படவில்லை என்றும், அதற்கான எந்தவோர் ஆதாரமும் வைத்தியப் பரிசோதனைகளில் கண்டறியப்படவில்லை என்றும் ரஷ்ய அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஷிபிலோவாவின் மரணம் இனம் தெரியாத காரணத்தால் ஏற்பட்ட தீவிர நியூமோனியா பாதிப்பினால் நிகழ்ந்துள்ளது என்றும், பிளேக் தடுப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் ஏனைய ஊழியர்கள் எவரிடமும் அண்மைக்காலமாக இவ்வாறான அறிகுறிகள் தென்படவில்லை என்றும் இர்குட்ஸ்க் பிராந்திய ஆளுநர் இகோர் கொப்ஸேவ் தெரிவித்துள்ளார். 

உயிரிழந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் இருவருக்கு கோவிட்-19 தொற்றும், மேலும் இருவருக்கு ரைனோவைரஸ் தொற்றும் கண்டறியப்பட்டுள்ளதைத் தவிர, வேறு எவ்வித ஆபத்தான தொற்றுநோய்களும் இனங்காணப்படவில்லை என ரஷ்யாவின் பொதுச் சுகாதார கண்காணிப்பு அமைப்பான ரோஸ்போட்ரெப்நாட்சர் குறிப்பிட்டுள்ளது.

நியூமோனிக் பிளேக் என்பது மனிதர்களுக்கிடையில் சுவாசத் திவலைகள் ஊடாக அதிவேகமாகப் பரவக்கூடிய தீவிர தொற்று என்பதால், இச்சம்பவம் சர்வதேச ரீதியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Read More

Previous Post

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக சவுரவ் கங்குலி நியமனம்.. வரும் சீசனில் வலுவான அணியை உருவாக்க திட்டம்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post

இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை… முக்கிய தகவலை வெளியிட்ட அமீரகம்! | World News (உலக செய்திகள்)

Next Post
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை… முக்கிய தகவலை வெளியிட்ட அமீரகம்! | World News (உலக செய்திகள்)

இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை... முக்கிய தகவலை வெளியிட்ட அமீரகம்! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin