Last Updated:
மண்டை ஓடு உடைந்து, தீவிரமான காயம் ஏற்பட்ட இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு முக்கிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை பற்றிய முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
Flydubai விமானத்தை ஆபத்திலிருந்து காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு மண்டை ஓட்டில் சிறிய விரிசல் ஏற்பட்டதாகவும், இதற்கு சவுதி அரேபியாவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி கடந்த 30-ம் தேதி 174 பேர் பயணித்த விமானத்தை ஸ்மித் மச்சார் இயக்கினார். ஓமன் நாட்டை சேர்ந்த ஹமாம் அல் ஹம்மாமி இணை விமானியாக இருந்தார். விமானம் ஜோர்டான் வான் பகுதியை நெருங்கிய நேரத்தில், திடீரென காக்பிட்டில் இருந்த Crash Axe-ஆல் ஸ்மித் மச்சாரை, ஹமாம் அல் ஹம்மாமி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ஸ்மித் மச்சார், பைலட் அறையை திறந்து, சக பயணிகளின் துணையுடன் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க உதவினார்.
துணை பைலட்டால் தாக்கப்பட்ட பைலட் ஸ்மித் மச்சார், சவுதி அரேபியாவின் தபூக் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது, ஸ்மித் மச்சாரின் மண்டை பகுதியில் விரிசல் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு மண்டை ஓடு சீரமைக்கப்பட்டதாகவும் அதன் பின்னரே அவர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அழைத்து வரப்பட்டதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.


