Last Updated:
தேர்தல் ஆணையரைச் சந்திக்க முயன்ற எதிர்க்கட்சி எம்பிக்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இது தேசத்துரோகச் செயல், யாரும் தப்பிக்க முடியாது என ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக இன்று (6ஆம் தேதி) எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி மேற்கொண்டனர். காலை 10.30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் பேரணியை தொடங்கி, தேர்தல் ஆணையம் நோக்கி சென்றனர்.
இதில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாட்டு எம்.பி.க்கள் திருமாவளவன், சு. வெங்கடேசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்நிலையில், தேர்தல் ஆணையம் அருகேயே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சென்ற போது காவல்துறை அவர்களை தடுத்து நிறுத்தியது.
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “சுமார் 300 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களைச் சந்திக்க விரும்பினோம். ஆனால், காவல்துறையினர் எங்களை இங்கே தடுத்து நிறுத்திவிட்டனர். நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், ஏன் இங்கே தடுத்து நிறுத்தப்பட்டோம் என்று எங்களுக்குத் தெரியவில்லை.
தேர்தல் ஆணைய அலுவலகம் வெறும் 50 மீட்டர் தொலைவில் உள்ள நிலையில், இந்தச் சிக்கலை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 300 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஞானேஷ் குமாரைச் சந்திக்க விரும்புகின்றனர், ஆனால் அவர் பயப்படுகிறார். நாட்டில் என்ன நடக்கிறது? தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் தேர்தல் ஆணையம் சந்திக்கவில்லை என்றால், ஜனநாயகத்திற்கு என்ன அர்த்தம்?
#WATCH | Delhi | Amid INDIA bloc MPs’ protest against the CEC, LoP, Lok Sabha, Rahul Gandhi says, “Around 300 MPs wanted to meet the Election Commissioner Gyanesh Kumar and the two ECs, but we have been stopped here by the police. We are elected representatives, but we don’t know why we have been stopped here. We can’t understand the problem—when the Election Commission is merely 50 metres away. 300 Opposition MPs want to meet Gyanesh Kumar, but he is scared. What is happening in the country? What is the meaning of democracy if the Election Commission doesn’t meet the elected representatives?…
“We are not only countering them (BJP); we will destroy them. I have no interest in what the BJP says. I am standing here to save democracy in India. Along with me, 300 MPs, who also want to save democracy, had come here. Amit Shah, Narendra Modi, Mohan Bhagwat, and Gyanesh Kumar have destroyed democracy in the country. The whole country agrees with this. The youth of the nation understand and agree with it. Even the police personnel agree with it. Narendra Modi, Amit Shah and Mohan Bhagwat have hijacked the nation through ‘vote chori’, and Gyanesh Kumar has helped them. Action will be taken against all of them. What has been done to our country is called treason; nobody is going to escape.”— ANI (@ANI) October 6, 2026
நாங்கள் பாஜகவை எதிர்ப்பது மட்டுமின்றி வீழ்த்தவும் செய்வோம். பாஜக என்ன சொல்கிறது என்பதில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. இந்தியாவில் ஜனநாயகத்தைக் காக்கவே நான் இங்கே நிற்கிறேன். ஜனநாயகத்தைக் காக்க விரும்பும் 300 நாடாளுமன்ற உறுப்பினர்களும் என்னுடன் இங்கு வந்திருந்தனர்.
அமித் ஷா, நரேந்திர மோடி, மோகன் பகவத் மற்றும் ஞானேஷ் குமார் ஆகியோர் நாட்டின் ஜனநாயகத்தைச் சீர்குலைத்துவிட்டனர். நாடு முழுவதும் இதை ஒப்புக்கொள்கிறது. நாட்டின் இளைஞர்கள் இதைப் புரிந்துகொண்டு ஒப்புக்கொள்கிறார்கள். காவல்துறை அதிகாரிகள்கூட இதை ஒப்புக்கொள்கிறார்கள்.
நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் மோகன் பகவத் ஆகியோர் ‘வாக்குத் திருட்டு’ மூலம் நாட்டைக் கைப்பற்றியுள்ளனர். ஞானேஷ் குமார் அவர்களுக்குத் துணை நின்றார். அவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். நம் நாட்டிற்கு இழைக்கப்பட்ட இந்தச் செயல் தேசத்துரோகம் என்று அழைக்கப்படுகிறது. இதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.


