International
oi-Nantha Kumar R
சனா: சவுதி அரேபியா மற்றும் ஏமன் ஹவுதிகள் இடையே மோதல் வலுத்துள்ளது. குறிப்பாக ஏமனில் சவுதி அரேபியா ஆதரவு பெற்ற படையினருக்கும், ஏமன் ஹவுதிகளுக்கும் இடையே கடும் மோதல் நடந்தது. இதில் காயமடைந்து சரணடைய தயாராக இருந்த ஹவுதிகள் மீது சவுதி ஆதரவு பெற்ற படையினர் கவச வாகனங்களை ஏற்றி துடிதுடிக்க கொன்றது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி அதிர வைத்துள்ளன.

ஏமன் நாட்டின் கிளர்ச்சி படைகள் செயல்பட்டு வருகின்றன. ஈரான் ஆதரவு பெற்ற அமைப்பாக ஹவுதிகள் உள்ளன. இந்த ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் தலைநகர் சனா உள்பட அதனை சுற்றி இன்னும் சில இடங்கள் உள்ளன.
அதேபோல் ஏமனில் சவுதி அரேபியாவின் ஆதரவு பெற்ற படைகள் உள்ளன. இந்த படைகள் ஏமன் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன.
தற்போது ஏமனில் உள்ள ஹவுதிகளுக்கும், சவுதி அரேபியாவுக்கும் பிரச்சனை உள்ளது. சவுதி அரேபியாவின் விமான நிலையங்களை குறிவைத்து ஏமன் ஹவுதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் கோபமடைந்த சவுதி அரேபியாவின் ஆதரவு பெற்ற படையினர், ஏமனில் ஹவுதிகளுடன் சண்டையிட்டு வருகின்றன.
ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீட்கும் வகையில் இந்த சண்டை நடந்து வருகிறது. ஏமனில் உள்ள பாப் அல் -மண்டேப் ஜலசந்தியை ஹவுதிகள் கைப்பற்றி உள்ளன. ஹவுதிகளிடம் இருந்து அந்த பகுதியை மீட்க சவுதி அரேபியாவின் ஆதரவு படையினர் சண்டையிட்டு வருகின்றன. இந்த சண்டையில் ஹவுதிகள் பலர் காயமடைந்தனர்.
அவர்களால் சவுதி ஆதரவு படையினரை எதிர்த்து சண்டையிட முடியவில்லை. இதனால் அவர்கள் உயிரை காப்பாற்றி கொல்ல சரண்டர் ஆக ரெடியாகினர். ஆனால் சவுதி அரேபியா ஆதரவு படைகள் இரக்கம் காட்டவில்லை. காயம்பட்டு மேற்கொண்டு சண்டையிட முடியாமல் ஹவுதிகள் தங்களின் கைகளை உயர்த்தி சரண்டர் அடைய முயன்றாலும் கூட சவுதி ஆதரவ படையினர் கவச வாகனங்களை (Armoured Vehicles) வைத்து அவர்களை ஏற்றி கொல்கின்றனர்.
இது ஜிடிஏ கேம் போன்று நடந்துள்ளது. துப்பாக்கி ஏந்தி சண்டையிட்டு போர்களத்தில் ஏமன் ஹவுதிகள் டயர்ட்டாகநிற்கும் வேளையில் சவுதி படையினர் வாகனங்களை வைத்து அவர்கள் மீது கண்மூடித்தனமாக மோதி கொல்கின்றனர். இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது இணையளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

