• Login
Tuesday, October 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் மின்சார தட்டுப்பாடு.. மத்திய அரசிடம் கூடுதல் மின்சாரம் கேட்கும் மாநிலங்கள்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 6, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் மின்சார தட்டுப்பாடு.. மத்திய அரசிடம் கூடுதல் மின்சாரம் கேட்கும் மாநிலங்கள்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 06, 2026 2:06 PM IST

இந்தியாவில் மின்சார தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் மத்திய அரசிடம் கூடுதல் மின்சாரம் கேட்டு கோரிக்கை விடுத்துள்ளன.

News18
News18

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர மின்தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்க, மத்திய அரசிடம் கூடுதல் மின்சாரம் ஒதுக்கீடு செய்யுமாறு தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

நாட்டில் வழக்கத்தை விட நீடிக்கும் வெயில், நிலக்கரி மின்நிலையங்களின் பராமரிப்புப் பணிகள் மற்றும் எல்-நினோ காரணங்களால் நீர்மின் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் பல மாநிலங்களில் மின்சார தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

இதனால் தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஆந்திரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், சத்தீஸ்கர் மற்றும் டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மத்திய அரசிடம் கூடுதல் மின்சார ஒதுக்கீடு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன.

மத்திய அரசிடமிருந்த 14 முதல் 15 கிகாவாட் வரையிலான அவசர கால மின்சார இருப்பு ஏற்கெனவே பெரும்பாலான மாநிலங்களுக்குப் பிரித்து ஒதுக்கப்பட்டு விட்டதால், கூடுதல் மின்சாரம் வழங்குவதில் மத்திய மின்சார அமைச்சகத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் நாட்டின் மின்சார பற்றாக்குறை 56 கோடி கிலோவாட்-அவர் (kWh) ஆக உயர்ந்துள்ளது. இது 2023 ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு பதிவான மிக அதிகபட்ச தட்டுப்பாடாகும். நிலக்கரி மின் உற்பத்தி 13.3% உயர்ந்தபோதிலும், நீர்மின் உற்பத்தி 20% வரை சரிந்ததே இந்த நெருக்கடிக்கு முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இரவு நேர மின் தட்டுப்பாட்டைத் தவிர்க்க பேட்டரி சேமிப்பு அமைப்புகளை விரைந்து ஒருங்கிணைக்குமாறு புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Read More

Previous Post

கிரிஷ் நிதி மோசடி வழக்கு: நாமல் ராஜபக்‌ஷ, ஜானகி சிறிவர்தன ஆகியோருக்கு விளக்கமறியல் நீடிப்பு – Sri Lanka Tamil News

Next Post

துவம்சம் செய்யும் ஹவுதி படைகள்.. பாம் அல் மண்டெப்-ல் விடிய விடிய தீ.. சவுதியில் கரும்புகை மண்டலம்!! | Red Sea Escalation: Houthis Strike Saudi Aramco Rabigh Refinery and Target Ships in Bab-el-Mandeb

Next Post
துவம்சம் செய்யும் ஹவுதி படைகள்.. பாம் அல் மண்டெப்-ல் விடிய விடிய தீ.. சவுதியில் கரும்புகை மண்டலம்!! | Red Sea Escalation: Houthis Strike Saudi Aramco Rabigh Refinery and Target Ships in Bab-el-Mandeb

துவம்சம் செய்யும் ஹவுதி படைகள்.. பாம் அல் மண்டெப்-ல் விடிய விடிய தீ.. சவுதியில் கரும்புகை மண்டலம்!! | Red Sea Escalation: Houthis Strike Saudi Aramco Rabigh Refinery and Target Ships in Bab-el-Mandeb

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin