• Login
Tuesday, October 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

துவம்சம் செய்யும் ஹவுதி படைகள்.. பாம் அல் மண்டெப்-ல் விடிய விடிய தீ.. சவுதியில் கரும்புகை மண்டலம்!! | Red Sea Escalation: Houthis Strike Saudi Aramco Rabigh Refinery and Target Ships in Bab-el-Mandeb

GenevaTimes by GenevaTimes
October 6, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
துவம்சம் செய்யும் ஹவுதி படைகள்.. பாம் அல் மண்டெப்-ல் விடிய விடிய தீ.. சவுதியில் கரும்புகை மண்டலம்!! | Red Sea Escalation: Houthis Strike Saudi Aramco Rabigh Refinery and Target Ships in Bab-el-Mandeb
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


துவம்சம் செய்யும் ஹவுதி படைகள்.. பாம் அல் மண்டெப்-ல் விடிய விடிய தீ.. சவுதியில் கரும்புகை மண்டலம்!!

அமெரிக்கா – ஈரான் மத்தியிலான போர் பதற்றம் குறைந்து காணப்பட்டாலும், ஹவுதி மற்றும் சவுதி அரேபியா மத்தியிலான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வருகிறது. யெமன் நாட்டில் ஹவுதி படைகள் தொடர்ந்து பெரும் பகுதிகளைக் கைப்பற்றி வருவதோடு, சவுதி மீது பெரும் தாக்குதலை நடத்தி வருகிறது.

செங்கடலில் நுழைவு வாயிலாக இருக்கும் பாப் அல் மண்டெப் வழித்தடத்தில் ஹவுதி படைகள் சமீபத்தில் கைப்பற்றப்பட்ட துறைமுக நகரமான மோக்கா மற்றும் பீரிம் தீவில் இருந்து 2 மாதங்களுக்குப் பின்பு மீண்டும் தாக்குதலைத் துவங்கியுள்ளது.

துவம்சம் செய்யும் ஹவுதி படைகள்.. பாம் அல் மண்டெப்-ல் விடிய விடிய தீ.. சவுதியில் கரும்புகை மண்டலம்!!

பாப் எல்-மண்டெப் நீரிணையில் சென்றுகொண்டிருந்த ஒரு கப்பல் மீது ஹவுதி படைகள் தாக்கியது மூலம் அக்கப்பல் தீ பற்றி எரிந்துள்ளது. இதை VIIRS செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் இவ்வழியாகக் கப்பல்கள் செல்ல தயக்கம் காட்டத் துவங்கியுள்ளது.

ஆகஸ்ட் 11ஆம் தேதிக்குப் பின்பு ஹவுதி படைகள் முதல் முறையாகத் தாக்குதலை நடத்தியுள்ளதால் ஹவுதி மற்றும் சவுதி அரேபியா மத்தியிலான பதற்றம் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

இதேவேளையில் சவுதி அரேபியாவின் செங்கடல் கரையில் உள்ள ராபிக் பகுதியில் இருக்கும் சவுதி அராம்கோ நிறுவனத்திற்குச் சொந்தமான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீதும் ஹவுதி படையினர் தாக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராபிக் பகுதியில் ஏற்பட்ட தாக்குதல் மூலம் சுமார் 80 கிலோமீட்டர் பரப்பளவுக்கு கரும் புகை சூழ்ந்து இருந்தது.

ஹவுதியின் இந்த தாக்குதல் மூலம் சுத்திகரிப்பு ஆலைக்கு அருகில் இருக்கும் எண்ணெய் சேமிப்பு கிடங்கள் மீதும் பெரும் தாக்குதலை நடத்தியுள்ளது. 2022க்கு பின்பு முதல் முறையாக ராபிக் சுத்திகரிப்பு ஆலை மீது ஹவுதிக்கள் தாக்கியுள்ளதால், சவுதி ராணுவம் தனது எண்ணெய் கட்டமைப்பு மீதான பாதுகாப்பை அதிகரித்துள்ளது. இந்த ஆலையில் இருந்து மட்டும் தினமும் 4 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.

சில வாரங்களுக்கு முன்பு ஹவுதி படைகள் சவுதி அரேபியாவின் கிழக்கு மேற்கு பைப்லைன் மீது தாக்கியது மூலம் கச்சா எண்ணெய் சப்ளையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் பின்பு மீண்டும் எண்ணெய் கட்டமைப்பு மீது குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளது.

இன்றைய பியூச்சர்ஸ் சந்தை வர்த்தகத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 0.52 சதவீதம் சரிந்து 99.74 டாலராக உள்ளது. சவுதி ஆராம்கோ இந்த ஆண்டு ஈரான், ஹவுதி படைகள் மூலம் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டாலும் அதன் பங்கு விலை 7.04 சதவீதம் அதிகரித்து 25.56 சவுதி ரியால் ஆக உள்ளது.

Share This Article

English summary

Red Sea Escalation: Houthis Strike Saudi Aramco Rabigh Refinery and Target Ships in Bab-el-Mandeb

Red Sea Escalation: Houthis Strike Saudi Aramco Rabigh Refinery and Target Ships in Bab-el-Mandeb — துவம்சம் செய்யும் ஹவுதி படைகள்.. பாம் அல் மண்டெப்-ல் விடிய விடிய தீ.. சவுதியில் கரும்புகை மண்டலம்!!

Story first published: Tuesday, October 6, 2026, 12:14 [IST]

Other articles published on Oct 6, 2026

Read More

Previous Post

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் மின்சார தட்டுப்பாடு.. மத்திய அரசிடம் கூடுதல் மின்சாரம் கேட்கும் மாநிலங்கள்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

கையில் துப்பாக்கி… கண்ணில் வீரம்… குடும்பத்தைக் காக்க ஆயுதம் ஏந்தும் பெண்கள்! ஈரானில் என்ன நடக்கிறது?

Next Post
கையில் துப்பாக்கி… கண்ணில் வீரம்… குடும்பத்தைக் காக்க ஆயுதம் ஏந்தும் பெண்கள்! ஈரானில் என்ன நடக்கிறது?

கையில் துப்பாக்கி... கண்ணில் வீரம்... குடும்பத்தைக் காக்க ஆயுதம் ஏந்தும் பெண்கள்! ஈரானில் என்ன நடக்கிறது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin