• Login
Tuesday, October 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தண்டரை புதுச்சேரியில் வாக்குப் பதிவு நிறுத்தம்! மரகதம் குமரவேலுக்கு நேர் பட்டனில் கருப்பு மை! | Maduranthagam by poll 2026: polling stopped after black in near whistle symbol was found

GenevaTimes by GenevaTimes
October 6, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
தண்டரை புதுச்சேரியில் வாக்குப் பதிவு நிறுத்தம்! மரகதம் குமரவேலுக்கு நேர் பட்டனில் கருப்பு மை! | Maduranthagam by poll 2026: polling stopped after black in near whistle symbol was found
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Vishnupriya R

Time
Updated: Tuesday, October 6, 2026, 9:45 [IST]

மதுராந்தகம்: மதுராந்தகம் சட்டசபை தொகுதியில் தண்டரை புதுச்சேரியில் ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் விசில் சின்னத்திற்கு நேரான பட்டனில் கருப்பு மை இருப்பதாக கூறி வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளின் எம்எல்ஏக்களாக மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் அதிமுக சார்பில் வென்றனர். இந்த நிலையில் தேர்தல் நடந்த 3 மாதங்களுக்குள் அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

by poll 2026 maduranthagam 2026

இதையடுத்து இரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டு இன்று இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், அதிமுக சார்பில் கணிதா சம்பத், திமுக சார்பில் பரந்தாமன், மார்க்சிஸ்ட் சார்பில் சுகந்தி, நாதக சார்பில் ஜானகிராமன், சுயேச்சைகள் என மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

இந்த இரு தொகுதிகளிலும் 5 முனை போட்டி நிலவுகிறது. மதுராந்தகம் தொகுதியில் 285 வாக்குச்சாவடிகள் உள்ளன. அங்கு 2.13 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 1,04,926, பெண்கள்- 1,08,797 ஆவர். இன்று காலை மதுராந்தகத்தில் வாக்குப் பதிவு தொடங்கியது. மாலை 6 மணிக்கு முடிவடைகிறது.

இந்த நிலையில் காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப் பதிவு நடத்தப்பட்டது. இதையடுத்து 7 மணி முதல் வாக்காளர்கள் வாக்களித்து வருகிறார்கள். காலை முதலே வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்கிறார்கள்.

இன்று இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கூலி தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால் காலையிலேயே வாக்களிக்க திரண்டனர்.

அந்த வகையில் மதுராந்தகம் தொகுதியில் நடைபெறும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தர்மபுரம் வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர்கள் வாக்களிக்க யாரும் வராத நிலையில் வாக்குச் சாவடியே வெறிச்சோடி காணப்படுகிறது.

அது போல் மதுராந்தகம் தொகுதி தண்டரை புதுச்சேரியில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் விசில் சின்னத்திற்கு நேரான பட்டனில் கருப்பு மை இருப்பதாக கூறி வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த மை எதேச்சையாக ஏற்பட்டதா, இல்லை எதற்காக ஹைலைட் செய்யப்பட்டது என்பது குறித்து தெரியவில்லை.

இன்றைய தினம் வாக்குச்சாவடிகளில் 285 பூத்களிலும் 2614 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார்.

English summary

Maduranthagam by poll 2026: polling stopped after black ink near whistle symbol was found. TVK candidate is Maragatham kumaravel.

Read More

Previous Post

நைஜீரியாவில் இராணுவ விமானம் வீழ்ந்து விபத்து: படையினர் உட்பட 32 பேர் உயிரிழப்பு; மூன்று நாள் தேசிய துக்கம் பிரகடனம் – Sri Lanka Tamil News

Next Post

பிரான்ஸ் மாணவர் போராட்டத்தில் மோதல்: கைக்குண்டு வெடித்து மாணவர் படுகாயம் – Sri Lanka Tamil News

Next Post
பிரான்ஸ் மாணவர் போராட்டத்தில் மோதல்: கைக்குண்டு வெடித்து மாணவர் படுகாயம் – Sri Lanka Tamil News

பிரான்ஸ் மாணவர் போராட்டத்தில் மோதல்: கைக்குண்டு வெடித்து மாணவர் படுகாயம் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin