• Login
Tuesday, October 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தோழியுடன் இருந்த கணவர்.. கண்டுபிடித்து வந்த மனைவி.. 100 மீட்டர் தூரம் கார் பானெட்டில் இழுத்து செல்லப்பட்ட அவலம் | Trending News (ட்ரெண்டிங் செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 5, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
தோழியுடன் இருந்த கணவர்.. கண்டுபிடித்து வந்த மனைவி.. 100 மீட்டர் தூரம் கார் பானெட்டில் இழுத்து செல்லப்பட்ட அவலம் | Trending News (ட்ரெண்டிங் செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 05, 2026 4:49 PM IST

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், தோழியுடன் மோமோஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்த கணவரை கார் பானெட்டில் 100 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வைரலாகும் வீடியோ
வைரலாகும் வீடியோ

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், தோழியுடன் மோமோஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்த கணவரை மனைவி நேரில் பார்த்ததால் பெரும் தகராறு வெடித்துள்ளது. கணவர் காருடன் தப்பிச் செல்ல முயன்றபோது, பானெட்டில் ஏறிப் படுத்துக்கொண்ட மனைவியை சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில், மயங்க் என்பவர் தனது தோழி மாஹியுடன் காரில் சென்றுள்ளார். சாஸ்திரி நகர் பகுதியில் இருவரும் மாலை நேரத்தில் காரில் அமர்ந்து மோமோஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த மயங்கின் மனைவி சுனிதா, கணவர் மற்றொரு பெண்ணுடன் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து காரின் கண்ணாடியை தட்டி, கணவரைக் கூப்பிட்ட சுனிதா, மரியாதையாக வெளியே வந்து விடு இல்லை என்றால் என்ன நடக்கும் என எனக்கேத் தெரியாது எனக் கூறி தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். மோமோஸ் சாப்பிட்ட படியே மோட்சமடைந்து விடுவோமோ என்கிற பயத்தில் பதற்றமடைந்த மயங்க், உடனே சுதாரித்து காரை பூட்டிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். கணவர் காரை எடுத்துச் செல்வதைத் தடுக்க சுனிதா காரின் முன்பகுதிக்கு சென்று நின்று மறைத்திருக்கிறார்

“என்னை மீறி எப்படி நீ தப்பித்துச் செல்கிறாய் என நான் பார்க்கிறேன்” என சவால் விட்டபடி அவர் காரைமறித்து நிற்க, மயங்கிற்கு மயக்கம் வருவது போல் இருந்துள்ளது. சிக்கினால் சின்னாபின்னமாகி விடுவோம் என்கிற பயத்தில் காரை ஸ்டார்ட் செய்து கிளப்பியிருக்கிறார் மயங்க்.

ஆனால் மனைவி சுனிதாவோ விடுவதாக இல்லை. காரின் பானெட்டின் மீது ஏறி படுத்துக் கொண்டு உடும்புப் பிடியாக பிடித்துக் கொண்டார். சுனிதா பானெட்டின் மீது ஆபத்தான நிலையில் படுத்திருப்பதைப் பார்த்த பின்னும் மயங்க் காரை நிறுத்தவில்லை. மனைவி முக்கியமா? உயிர் முக்கியமா? என்கிற மனப்போராட்டத்தில் இறுதியாக உயிர் தான் முக்கியம் என முடிவெடித்த மயங்க் சுமார் 100 மீட்டர் தூரம் வரை காரின் பானெட்டில் சுனிதாவை வைத்துக் கொண்டு வேகமாக சென்றிருக்கிறார்.

அப்போது, “காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்” என சுனிதா கூச்சலிட்ட நிலையில், சம்பவத்தைப் பார்த்த பொதுமக்கள் ஒன்று திரண்டுள்ளனர். தனக்கு முன் மனைவி முந்திக் கொண்டாளே என நொந்து கொண்ட மயங்க் காரை ஆவேசமாக நிறுத்தியிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சம்பவ இடத்திற்கு உடனே போலீசார் வர.. தாக்குதல், வரதட்சணை கொடுமை என சரமாரியாக லிஸ்ட் போட்டு அடுக்கடுக்காக புகார்களை அளித்துள்ளார் மனைவி சுனிதா..

மேலும், மனைவியை காரால் மோதிக் கொல்ல முயன்றதாகக் கூறி மயங்க் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் மயங்க் மட்டுமின்றி அவருடன் இருந்ததாக கூறப்படும் மாஹி என்வரையும் போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவத்தின் போது, பயன்படுத்தப்பட்ட டொயோட்டா அர்பன் க்ரூஸர் காரையும் போலீசார் பறிமுதல் செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தோழியுடன் ஒரு மோமோஸ் சாப்பிட்டது குற்றம் எனக் கூறி அடுக்கடுக்கான புகார்களை கொடுத்திருக்கிறாளே என மனைவி மீது நொந்து கொண்டே சிறைக்கு சென்றிருக்கிறார் மயங்க்..

Read More

Previous Post

நாடு திரும்பினார் ஷிராந்தி ராஜபக்ச…!

Next Post

முந்தைய பள்ளி வழக்குகள் ‘மூடப்பட்டன’ என்ற குற்றச்சாட்டுகளை பத்லினா நிராகரிக்கிறார் – Malaysiakini

Next Post

முந்தைய பள்ளி வழக்குகள் ‘மூடப்பட்டன’ என்ற குற்றச்சாட்டுகளை பத்லினா நிராகரிக்கிறார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin