International
oi-Halley Karthik
மாஸ்கோ: வேலியில் போன ஓணானை பிடித்து.. வேட்டியில் விட்ட கதையாக.. ரஷ்யா பார்த்த தேவையில்லாத வேலையால் தற்போது அதன் பக்கத்து நாடுகள் தங்களின் எல்லையை மூடி சீல் வைக்க ரெடியாகி வருகின்றன.
இது நடந்து ஒரு வாரம் இருக்கும். ரஷ்யாவின் சைபிரியா பகுதியில் உள்ள ஒரு அறிவியல் நோய் தொற்று வைரஸ் ஆய்வகத்தில்தான் சம்பவம் நடந்தது. 28 வயதான இளம் பெண் ஆய்வாளர் ஒருவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. திடீரென கையில் வைத்திருந்த கொடிய வைரஸ் பாட்டிலை தவறவிட்டிருக்கிறார். அவ்வளவுதான் உள்ளே இருந்த வைரஸ் லீக் ஆகி மொத்தமாக அந்த ஆய்வாளரை அட்டாக் செய்திருக்கிறது.

உஷாரான மெடிக்கல் டீம், அந்த பெண்ணை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்திருக்கிறது. பரிசோதித்ததில் அவரது உடலில் கொடிய பிளேக் வைரஸ் பரவியிருக்கிறது. அவ்வளவுதான் எல்லாம் முடிந்தது.. வைரஸ் பரவிய அடுத்த சில மணி நேரத்தில் அவர் கடுமையான நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். எவ்வளவுதான் ட்ரை செய்து பார்த்தும்.. மருத்துவர்களால் அவரை காப்பாற்ற முடியவில்லை. அக்.1 அன்று அவர் உயிரிழந்தார்.
பிரச்சனை இத்துடன் முடியவில்லை. இவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பின்னர்.. இவருடன் 197 பேர் கான்டாக்டில் இருந்திருக்கின்றனர். எனவே அவர்கள் மூலம் வைரஸ் வெளியில் பரவும் அபாயம் ஏற்பட்டது. வேறு வழியில்லை.. 197 பேரையும் பிடித்து வந்து 5 மருத்துவமனை முழுவதும் இவர்களுக்கு என ஒதுக்கி.. ரத்த மாதிரி எடுத்து டெஸ்ட் செய்யப்பட்டது. நல்ல வேளையாக ரிசல்ட் நெகட்டிவ்தான் வந்தது. ஆனாலும் இந்த வைரஸ் எப்படி வேண்டுமானாலும் பரவியிருக்கலாம். கொரோனா வைரஸ் பரவல் மாதிரி.. இன்னொரு நிலைமை உருவாகிவிடக்கூடாது என்பதால்.. ரஷ்யாவின் பக்கத்து நாடுகள் உச்சக்கட்ட அலர்ட் மோடுக்கு போயிருக்கின்றன.
கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் ரஷ்யாவுக்கு பக்கத்தில் இருக்கின்றன. இவை தங்களது எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருக்கிறது. சாதாரண சளிதான் என்று சொன்னால் கூட.. ரஷ்யாவிலிருந்து வருவோர்களை ஒன்றரை மாதத்திற்கு ஆஸ்பிட்டலில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டிருக்கிறதாம். எனவே இந்த எல்லையை தாண்டவே பலரும் பயப்படுகிறார்களாம். ரெண்டு நாள் பார்ப்போம்.. வைரஸ் அறிகுறி அதிகமாக இருந்தால்.. எல்லையை சீல் வைத்துவிடுவோம் என்றும் பக்கத்து நாட்டு அதிகாரிகள் கூறுகின்றார்கள்.
நிபுணர்கள் இதுப்பற்றி கூறுகையில்.. அவ்வளவு சீக்கரத்துல இந்த வைரஸ் உலகத்திற்கு பரவாது என்று நல்ல சேதி சொல்லியிருக்கிறார்கள். வைரஸ் கொஞ்சம் கோளாரானது என்பதால்.. அது அட்டாக் செய்த உடன் நம்மை படுக்கையில் தள்ளிவிடும். அப்புறம் எப்படி நாட்டின் எல்லையை தாண்டுவது? எனவே, இது சீக்கிரமாக வெளிநாடுகளுக்கு பரவ வாய்ப்பு இல்லை என்றும்.. அப்படியே பரவினாலும் அதற்கு எதிரான வீரியமான தடுப்பு மருந்துகள் இருக்கின்றன என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
எப்படியோ இன்னொரு கொரோனா தொற்று வராமல் இருந்தால் சரிதான்!

