Last Updated:
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என சிபிஎம் எம்பி சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், ஆணையத்தில் இருக்கும் மற்ற இரண்டு அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்காமல் தனிச்சையாக முடிவுகளை எடுத்ததாகவும், எஸ்.ஐ.ஆர். விவகாரங்களில் தனிச்சையாக செயல்பட்டதாகவும், ஆணையத்தில் இருக்கும் மற்ற இரண்டு அதிகாரிகள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்துவருகின்றன. காங்கிரஸ் மற்றும் கரப்பான்பூச்சி ஜனதா தளம் ஆகியவை டெல்லியில் போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளன.
இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் தொடர்பான பல மனுக்களையும் உச்சநீதிமன்ற விசாரணையில் இருந்துவருகிறது. இந்நிலையில் இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது அதிகாரங்களைப் பயன்படுத்திய விதம் மற்றும் சர்ச்சைக்குரிய ‘படிவம் 6’ மாற்றம் உள்ளிட்டவை குறித்துத் தொடரப்பட்ட வழக்குகளில், சம்பந்தப்பட்ட முடிவுகள் தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் திங்களன்று உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த உத்தரவை மேற்கோள்காட்டி, சிபிஎம் எம்.பி. சு. வெங்கடேசன், “புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கான ஆன்லைன் படிவம் 6ல் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் சட்டவிரோதம் என இரண்டு தேர்தல் ஆணையர்களும் பதிவு செய்துள்ளனர். அதையும் மீறிதான் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் படிவம் 6ஐத் திருத்தியுள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையரைக் கைது செய்க!
புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கான ஆன்லைன் படிவம் 6ல் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் சட்டவிரோதம் என இரண்டு தேர்தல் ஆணையர்களும் பதிவு செய்துள்ளனர். அதையும் மீறிதான் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் படிவம் 6ஐத் திருத்தியுள்ளார்.இவ்விவகாரம் குறித்து செப்டம்பர் 26ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆனையம் அளித்த விளக்கத்தில் படிவம் 6ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை உச்ச நீதிமன்றம் தனது முந்தைய உத்தரவுகளில் ஏற்றுக்கொண்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.
ஆனால், இன்று நடந்த வழக்கு விசாரணையில் படிவம் 6ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு நாங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவெ பல்வேறு தளங்களில் அம்பலப்பட்ட ஞானேஷ்குமார் இன்று உச்ச நீதிமன்றத்திலும் அம்பலப்பட்டுள்ளார். பல லட்சம் இந்தியர்களின் வாக்களிக்கும் உரிமையைத் திருடிய இக்குற்றம் தேசத்துரோகத்துக்கு நிகரானது. இக்குற்றத்திற்காக அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்.
#ARREST_GYANESH_KUMAR
— Su Venkatesan MP (@SuVe4Madurai) October 5, 2026
இவ்விவகாரம் குறித்து செப்டம்பர் 26ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையம் அளித்த விளக்கத்தில் படிவம் 6ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை உச்ச நீதிமன்றம் தனது முந்தைய உத்தரவுகளில் ஏற்றுக்கொண்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. ஆனால், இன்று நடந்த வழக்கு விசாரணையில் படிவம் 6ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு நாங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே பல்வேறு தளங்களில் அம்பலப்பட்ட ஞானேஷ்குமார் இன்று உச்ச நீதிமன்றத்திலும் அம்பலப்பட்டுள்ளார். பல லட்சம் இந்தியர்களின் வாக்களிக்கும் உரிமையைத் திருடிய இக்குற்றம் தேசத்துரோகத்துக்கு நிகரானது. இக்குற்றத்திற்காக அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்” என தனது எக்ஸ் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.


