உடல்நலக் குறைவு சிகிச்சை தொடர்பாக சிங்கப்பூருக்கு சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவுக்கு நீதிமன்றத்தில் முன்பிணை மனுவொன்று கோரப்பட்டுள்ளது.
தனது சட்டத்தரணி ஜெயபாலன் ஊடாக இன்று (05) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் குறித்த மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றம் விதிக்கும் எந்தவொரு நிபந்தனைக்கும் உட்பட்டு தன்னை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு ஷிரந்தியால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
விமான நிலையத்தில் கைது
இதன்படி இந்த மனு, மாளிகாகந்த நீதவான் ஜனனி பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டுள்ள அதேவேளை, மேரி லூயிஸ் ஷிரந்தி ராஜபக்ச மனுதாரராக பெயரிடப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இலங்கைக்குத் திரும்பும்போது விமான நிலையத்தில் வைத்து காவல்துறையால் கைது செய்யப்படக்கூடிய சாத்தியக்கூறுகளைச் சுட்டிக்காட்டி, நீதிமன்றம் விதிக்கும் எந்தவொரு நிபந்தனைக்கும் உட்பட்டு தனக்கு பிணை வழங்குமாறு மனுவில் கோரியுள்ளார்.

