Last Updated:
தீரமிக்க விமானி ஸ்மித் மச்சார் சிறந்த மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாகவும், அவர் குணமடைந்து வருவதாகவும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது
174 பேரின் உயிரை காத்த இந்திய விமானி ஸ்மித் மச்சார் குணமடைந்து வருவதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
தன் உயிரை பணயம் வைத்து விமான கடத்தல் முயற்சியை தடுத்து, 170க்கும் மேற்பட்டோரின் உயிரை காப்பாற்றிய பெருமை மிகு இந்திய விமானி ஸ்மித் மச்சாரை, ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை பிரதமர் ஷேக் ஹம்தான் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்து பாராட்டிய காட்சிதான் இது..
அபுதாபியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஸ்மித் மச்சாரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஐக்கிய அரபு அமீரக துணை பிரதமர், விமானி மச்சார் உச்சபட்ச தீரத்தை வெளிப்படுத்தி, மனித உயிர்களை பொறுப்புடன் காத்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்தியர்களுக்கு தங்களின் அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்தும் விதமாக, அடுத்தாண்டு மே மாதம் நடைபெற உள்ள இஸ்ரேல் சுதந்திர தின விழாவில், பிரதமர் மோடியும், விமானி ஸ்மித் மச்சாரும் பங்கேற்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார். இருவரும் தீபமேற்றி விழாவை தொடங்கிவைக்க வேண்டுமென கூறியுள்ளார். தீரமிக்க விமானி ஸ்மித் மச்சார் சிறந்த மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாகவும், அவர் குணமடைந்து வருவதாகவும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்க தொடர்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

