தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் (NBRI), ஐந்து மாவட்டங்களில் உள்ள 13 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை திங்கட்கிழமை (05) மாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும்.
மண்சரிவு மற்றும் அதனுடன் தொடர்புடைய அபாயங்களைக் கருத்திற்கொண்டு, முதலாம் மற்றும் இரண்டாம் நிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் நிலை எச்சரிக்கை பதுளை மாவட்டத்தின் பசறை; கண்டி மாவட்டத்தின் மினிப்பே மற்றும் உடதும்பர; கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட; மாத்தளை மாவட்டத்தின் அம்பங்கங்க கோரளை, மாத்தளை மற்றும் ரத்தோட்டை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, முதலாம் நிலை எச்சரிக்கை கண்டி மாவட்டத்தின் உடபலாத்த; கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹுபிட்டிய மற்றும் ரம்புக்கனை; இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொட, வெலிகேபொல மற்றும் அயகம ஆகிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு ஏற்படுவதற்கான அறிகுறிகள் அல்லது அதனுடன் தொடர்புடைய அபாய எச்சரிக்கைகள் தென்பட்டால், மக்கள் மிகவும் அவதானமாகச் செயற்படுவதுடன், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் அறிவுறுத்தியுள்ளது.

