• Login
Sunday, October 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“சட்டப்பூர்வ தேர்தல்களால் காங்கிரஸ் கைகளில் இருந்து அதிகாரம் நழுவியது” – பாஜக எம்.பி. சுதான்ஷு திரிவேதி | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 4, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“சட்டப்பூர்வ தேர்தல்களால் காங்கிரஸ் கைகளில் இருந்து அதிகாரம் நழுவியது” – பாஜக எம்.பி. சுதான்ஷு திரிவேதி | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 04, 2026 7:03 PM IST

காங்கிரஸ் தோல்விகளுக்கு இந்தியாவின் தேர்தல் முறையைக் குறை கூறுவதாக பாஜக எம்.பி. சுதான்ஷு திரிவேதி தெரிவித்துள்ளார்.

News18
News18

காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே இன்று கர்நாடகாவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “இன்று ஒட்டுமொத்த நாடும் சட்டவிரோத தேர்தல்களின் அடிப்படையிலேயே இயங்கிக்கொண்டிருக்கிறது. மோடி ஒரு சட்டவிரோத பிரதமர், அமித்ஷா சட்டவிரோத அமைச்சர். மேலும், அனைத்து மாநில முதலமைச்சர்களும் சட்டவிரோதமானவர்கள். எனவே இவை அனைத்தும் கலைக்கப்பட்டு, மீண்டும் வாக்குச் சீட்டு மூலம் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்.பி. சுதான்ஷு திரிவேதி, “தங்கள் தோல்விகளுக்கு இந்தியாவின் தேர்தல் முறையை குறை கூறுகிறது காங்கிரஸ்” எனப் பதில் கொடுத்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக எம்.பி. சுதான்ஷு திரிவேதி கூறியதாவது; “இந்திய வரலாற்றிலேயே தெளிவான பெரும்பான்மையைப் பெற்ற முதல் காங்கிரஸ் அல்லாத அரசாக 2014-ல் அமைந்த அரசை, நீங்கள் ‘சட்டவிரோதமானது’ என்று முத்திரை குத்துகிறீர்கள். தங்கள் தோல்விகளுக்கு இந்தியாவின் தேர்தல் முறையைக் குறை கூறுவதன் மூலம் காங்கிரஸ் தன்னைத் தற்காத்துக்கொள்ள முடியாது.

#WATCH | Delhi | BJP MP Sudhanshu Trivedi says, “…The government formed in 2014, the first non-Congress government in India’s history to secure a clear majority, is being labeled “illegal” by you…The Congress cannot defend itself by blaming India’s electoral system for its own failures. The reality is that the Congress historically won elections only when illegal practices were rampant—when ballot papers were looted, booths were captured, and there were no CCTVs or independent media…As long as illegal activities—such as booth capturing, ballot box looting, and murders—prevailed (even during Rajiv Gandhi’s 1989 election, shots were fired in Amethi), the Congress remained in power. It is only since elections became legal and transparent that power has been slipping out of your hands. The frustration stemming from this loss of power is evident in your statements”


— ANI (@ANI) October 4, 2026

வாக்குச்சீட்டுகள் கொள்ளையடிக்கப்படுதல், வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்படுதல் மற்றும் சிசிடிவி (CCTV) அல்லது சுதந்திரமான ஊடகங்கள் இல்லாத சூழல் என சட்டவிரோத நடவடிக்கைகள் மலிந்திருந்த காலத்தில்தான் காங்கிரஸ் வரலாற்று ரீதியாகத் தேர்தல்களில் வெற்றி பெற்றது.

வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுதல், வாக்குப்பெட்டி கொள்ளை மற்றும் கொலைகள் போன்ற சட்டவிரோதச் செயல்கள் நிலவியவரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. தேர்தல்கள் சட்டப்பூர்வமாகவும் வெளிப்படையாகவும் மாறிய பிறகுதான் அதிகாரம் உங்கள் கைகளை விட்டு நழுவத் தொடங்கியுள்ளது. இந்த அதிகார இழப்பால் ஏற்படும் விரக்தி உங்கள் கருத்துகளில் தெளிவாகத் தெரிகிறது” எனத் தெரிவித்தார்.

Read More

Previous Post

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த இருவர் யாழில் கைது

Next Post

தொகுதிக்கு 10 பெண்கள்… தொழில் தொடங்க ரூ. 5 கோடி வரை கடன்! தமிழக அரசின் “வெற்றி மகளிர்” திட்டத்தில் சேருவது எப்படி? | வணிகச் செய்திகள்

Next Post
தொகுதிக்கு 10 பெண்கள்… தொழில் தொடங்க ரூ. 5 கோடி வரை கடன்! தமிழக அரசின் “வெற்றி மகளிர்” திட்டத்தில் சேருவது எப்படி? | வணிகச் செய்திகள்

தொகுதிக்கு 10 பெண்கள்... தொழில் தொடங்க ரூ. 5 கோடி வரை கடன்! தமிழக அரசின் "வெற்றி மகளிர்" திட்டத்தில் சேருவது எப்படி? | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin