• Login
Sunday, October 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தொகுதிக்கு 10 பெண்கள்… தொழில் தொடங்க ரூ. 5 கோடி வரை கடன்! தமிழக அரசின் “வெற்றி மகளிர்” திட்டத்தில் சேருவது எப்படி? | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
October 4, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
தொகுதிக்கு 10 பெண்கள்… தொழில் தொடங்க ரூ. 5 கோடி வரை கடன்! தமிழக அரசின் “வெற்றி மகளிர்” திட்டத்தில் சேருவது எப்படி? | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 04, 2026 7:12 PM IST

Vetri Magalir Thozhilmunaivor Membattu Thittam Guidelines How to Apply: கடன் பெறுவதற்கான தகுதியாக, எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களின் சிபில் தரவரிசை  7 அல்லது அதற்குக் குறைவாகவும், தனிநபர் சிபில் ஸ்கோர் 600-க்கும் அதிகமாகவும் இருக்க வேண்டும்

வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்
வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்

தமிழ்நாட்டில் மகளிர் மேம்பாட்டையும், அவர்கள் மத்தியில் புதிய தொழில்முனைவோர்களை உருவாக்குவதையும் ஊக்குவிக்கும் வகையில், “வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்” என்ற நிதியுதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாக, தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும், தொகுதிக்கு 10 மகளிர் தொழில்முனைவோர்கள் வீதம் அந்தந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படவுள்ளனர். சட்டமன்ற உறுப்பினர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களை தகுதியின் அடிப்படையில்  தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் தேர்வு செய்யும். இதன் மூலம் மாநிலம் முழுவதும் அடிமட்ட அளவில் உள்ள ஆயிரக்கணக்கான பெண்கள் மாபெரும் தொழில் வாய்ப்புகளைப் பெறவுள்ளனர்.

“வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்” முக்கிய நோக்கம் என்ன?: உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், ஏற்கனவே இயங்கி வரும் நிறுவனங்களை விரிவுபடுத்தவோ, நவீனமயமாக்கவோ அல்லது பல்வகைப்படுத்தவோ இந்தச் சிறப்பு நிதியுதவித் திட்டம் வழிவகை செய்கிறது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியைக் கொண்டு, தொழிற்சாலைக்குத் தேவையான நிலம் வாங்குதல், கட்டடம் கட்டுதல் மற்றும் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலிருந்தோ புதிய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குதல் ஆகியவற்றுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எத்தகைய நிறுவன அமைப்புகள் இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெறத் தகுதியுடையவை? இத்திட்டத்தில் பயன்பெற, தொழில் நிறுவனத்தில் குறைந்தபட்சம் 51 சதவீதப் பங்குரிமையை மகளிர் தொழில்முனைவோர் கொண்டிருக்க வேண்டும். தனிநபர் நிறுவனங்கள் (Proprietary/One Person Company), கூட்டாண்மை மற்றும் வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கூட்டாண்மை நிறுவனங்கள் (Partnership/LLP Firms) மற்றும் தனியார் / பொதுத்துறை நிறுவனங்கள் (Private/Public Ltd. Company) ஆகியவை இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தகுதியானவை. மேலும், இத்திட்டத்தின் கீழ் முதல்முறை தொழில்முனைவோராகக் களமிறங்கும் பெண்களுக்கு, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII) மூலம் சிறப்புத் தொழிற்பயிற்சியும் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடன் உதவி எவ்வளவு? இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ. 10 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ. 500 லட்சம் (ரூ. 5 கோடி) வரை நிதியுதவி பெற முடியும். இதற்கான முதன்மை கடன் வட்டி விகிதம் (Prime Lending Rate) தற்போது ஆண்டுக்கு 9.95 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திட்ட மதிப்பீட்டில் பயனாளர்களின் பங்களிப்புத் தொகையாக, புதிய நிறுவனங்கள் 20 சதவீதமும், ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் 15 சதவீதமும் செலுத்த வேண்டும். நிலுவையில் உள்ள கடன்களையும் சேர்த்து நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம் 4.00:1.00 என்ற அளவில் இருக்க வேண்டும்.

கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் என்ன? பெறப்படும் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த அதிகபட்சமாக 9 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படுகிறது. தொழில் தொடங்கும் ஆரம்பக்கட்ட சிரமங்களைக் கருத்தில் கொண்டு, இதில் 2 ஆண்டுகள் வரையிலான தவணை ஒத்திவைப்பு காலமும் (Moratorium period) அடங்கும். கடனை மாதாந்திரத் தவணை முறையில் திருப்பிச் செலுத்த வேண்டும்.

கடனுதவி பெறப் பிணையச் சொத்து சமர்ப்பிப்பது கட்டாயமா? ஆம். கடன் பெறுவதற்கான தகுதியாக, எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களின் சிபில் தரவரிசை  7 அல்லது அதற்குக் குறைவாகவும், தனிநபர் சிபில் ஸ்கோர் 600-க்கும் அதிகமாகவும் இருக்க வேண்டும். புதிய நிறுவனங்கள் மற்றும் 3 ஆண்டுகளுக்குக் குறைவாகச் செயல்பட்டு வரும் நிறுவனங்கள்: கடன் தொகையில் 40 சதவீதம் மதிப்பிலான அசையாச் சொத்துக்களைப் பிணையமாக அளிக்க வேண்டும். நல்ல செயல்திறனுடன் 3 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் நிறுவனங்கள் சலுகையாக, கடன் தொகையில் 20 சதவீத மதிப்பிலான அசையாச் சொத்துக்களைப் பிணையமாக வழங்கினால் போதுமானது.

முன்கூட்டியே செலுத்த வேண்டிய கட்டணம் (Pre-closure charges) ஏதேனும் உண்டா? மகளிர் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக, இத்திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படும் கடன்களுக்கு ஆய்வுக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுளளது. எனினும், சலுகைக் கட்டணமாகக் கடன் தொகையில் 0.25 சதவீதம் முன் கூட்டியே செலுத்தப்பட வேண்டும்.சட்டமன்ற உறுப்பினர்களின் நேரடித் தேர்வின் மூலம் தகுதியான பெண்களைத் தேடிக் கண்டறிந்து அவர்களைத் தொழில்முனைவோராக மாற்றும் இந்த முன்னெடுப்பு, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியிலும், பெண்களின் தற்சார்பு நிலையிலும் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Read More

Previous Post

“சட்டப்பூர்வ தேர்தல்களால் காங்கிரஸ் கைகளில் இருந்து அதிகாரம் நழுவியது” – பாஜக எம்.பி. சுதான்ஷு திரிவேதி | India News (இந்தியா செய்திகள்)

Next Post

MIC-ன் பங்களிப்புகளை இளம் இந்தியர்கள் கேள்வி கேட்பதற்காக அவர்களைக் குறை கூற வேண்டாம் – சரவணன் – Malaysiakini

Next Post

MIC-ன் பங்களிப்புகளை இளம் இந்தியர்கள் கேள்வி கேட்பதற்காக அவர்களைக் குறை கூற வேண்டாம் – சரவணன் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin