தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) நிறுவனத்தின் கம்பிகளைத் திருட முயன்றபோது, காப்பார் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு காவல்துறை அனுப்பப்படுவதற்கு முன்பே, மலேசியரான அந்நபரின் உடலை பொதுமக்கள் கண்டெடுத்ததாக வட கிள்ளான் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் ராம்சே எம்போல் தெரிவித்தார். கம்பிகளைத் திருடும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது; அவரது உடலும் கைகளும் கம்பிகளுடன் இணைந்தே இருந்தன.
கம்பிகளை வெட்டும் கருவிகள், ஒரு பூட்டு மற்றும் பாதிக்கப்பட்டவரின் மோட்டார் சைக்கிள் ஆகியவையும் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்டன.” “இறந்தவரை அவரது குடும்பத்தினர் அடையாளம் கண்டுள்ளனர் என்று அவர் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4) அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பிரேதப் பரிசோதனைக்காக உடல் புஞ்சாக் ஆலம் யுஐடிஎம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ராம்சே கூறினார்.



