செல்வமகள் சேமிப்பு திட்டத்தில், 15 ஆண்டுகளுக்கு மட்டுமே பணம் செலுத்த வேண்டும். அதேவேளையில், கணக்கு மீதமுள்ள 6 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் மற்றும் அதில் அரசாங்கத்தின் வட்டி தொடர்ந்து கிடைக்கும். எனவே, சிறுமியின் உயர்கல்வி அல்லது திருமணம் 18 வயதுக்குப் பிறகு நடைபெறும் பட்சத்தில், அத்தொகையில் 50 சதவீதத்தையோ அல்லது முழுத் தொகையையோ திரும்பப் பெற முடியும். 18 வயது பூர்த்தியாவதற்கு முன், சாதாரண காரணங்களுக்காகப் பணத்தை எடுக்க முடியாது.


