• Login
Sunday, October 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“இந்த முறை விடவே கூடாது..” ஸ்கெட்ச் போட்டு முழு பலத்தோடு இறங்கும் பாஜக.. சளைக்காத எதிர்க்கட்சிகள் | Uttar Pradesh Election 2027: BJP, Samajwadi Party and Congress Gear Up for Three-Way Contest

GenevaTimes by GenevaTimes
October 4, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
“இந்த முறை விடவே கூடாது..” ஸ்கெட்ச் போட்டு முழு பலத்தோடு இறங்கும் பாஜக.. சளைக்காத எதிர்க்கட்சிகள் | Uttar Pradesh Election 2027: BJP, Samajwadi Party and Congress Gear Up for Three-Way Contest
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


India

oi-Vigneshkumar

Time
Published: Sunday, October 4, 2026, 10:23 [IST]

லக்னோ: உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருந்தாலும் கூட முக்கிய அரசியல் கட்சிகள் இப்போதே கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் பிரசாரம் மற்றும் கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. உபி தேர்தல் என்பது 2029 லோக்சபா தேர்தலுக்கு அரையிறுதியாக பார்க்கப்படும் நிலையில், இது முக்கியத்துவம் பெறுகிறது.

உத்தர பிரதேச தேர்தல் களத்தில் இப்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, சமாஜ்வாதி கட்சி தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி களத்தில் உள்ளன. காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வரும் போதிலும், தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

Uttar Pradesh Election BJP Congress

பாஜக

2022 சட்டசபை தேர்தலில் பாஜக 376 தொகுதிகளில் போட்டியிட்டு 255 இடங்களில் வெற்றி பெற்றது. அப்போது அக்கட்சிக்கு 41.29 சதவீத வாக்குகள் கிடைத்தன. இப்போது 2027 தேர்தலை எதிர்கொள்ள பாஜக அமைப்பு ரீதியான பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. மத்திய அரசில் உள்ள பாஜக தலைவர்களின் உத்தர பிரதேச பயணங்கள் அதிகரித்துள்ளதுடன், கட்சியின் அமைப்பை வலுப்படுத்தும் பணிகள், கொள்கை சார்ந்த பிரசாரம் அதிகரித்துள்ளது. மோடியின் பிறந்த நாளையொட்டி சேவா சங்கல்ப் அபியான் என்ற பிரசாரத்தை பாஜக தொடங்கியுள்ளது.

முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த ஆண்டு மே மாதம் தனது அமைச்சரவையில் 6 பேரை புதிதாக இணைத்தார். தொடர்ந்து மாநிலம் முழுக்க அவர் பயணம் மேற்கொண்டு வருகிறார். அமைச்சர்களுக்கும் மாவட்ட பொறுப்புகள் வழங்கப்பட்டு, மக்களுடன் நேரடியாக தொடர்பை ஏற்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சமாஜ்வாதி

மறுபுறம் எதிர்க்கட்சிகளும் இப்போதே தேர்தல் வேளைகளை ஆரம்பித்துவிட்டன. 2022 தேர்தலில் 347 தொகுதிகளில் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி 111 இடங்களில் வெற்றி பெற்றது. அக்கட்சி 32.06 சதவீத வாக்குகளை பெற்றது. பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரை குறிவைக்கும் PDA சமூக கூட்டணி வியூகத்தை சமாஜ்வாதி கட்சி தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இதில் பண்டிதர்களையும் உள்ளே அழைத்து வரும் வகையில் இப்போது தனது வியூகத்தை விரிவுபடுத்தி வருகிறது.

காங்கிரஸ்

2022ல் 399 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதன் வாக்கு சதவீதம் 2.33 ஆக இருந்தது. இந்த நிலையில், சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை காங்கிரஸ் நடத்தி வருகிறது. ஆனால் தொகுதிப் பங்கீடு இன்னும் முடிவாகவில்லை. காங்கிரஸ் வழக்கம் போல 120- 130 என்று வாய்க்கு வந்த நம்பரை கேட்கும் நிலையில், இது கூட்டணிக்கு சிக்கலாக மாறலாம்!

ராகுல் காந்தி இளைஞர்கள், குறிப்பாக Gen Z தலைமுறை, ஏழை மற்றும் பின்தங்கிய மக்கள், வேலைவாய்ப்பின்மை, ஜனநாயகம் மற்றும் நிறுவனங்களின் நேர்மை போன்ற விவகாரங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவை காங்கிரஸ் பிரசாரத்திலும் முக்கிய இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாயாவதி

2012ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் பகுஜன் சமாஜ் கட்சியும் 2027 தேர்தலுக்கான பணிகளை தொடங்கியுள்ளது. 2022ல் 403 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட அக்கட்சி ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. 12.88 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. இந்த முறையும் எந்த கூட்டணியிலும் இணையாமல் தனித்துப் போட்டியிடப் போவதாக மாயாவதி ஏற்கனவே அறிவித்துள்ளார். அவர் வழக்கம் போல வாக்குகளை பிரித்தாலும் வெல்ல முடியாது!

இதர கட்சிகள்

சிறிய கட்சிகளை பொறுத்தவரை ஜெயந்த் சவுத்ரி தலைமையிலான ராஷ்டிரிய லோக் தளம், 2022ல் சமாஜ்வாதி கூட்டணியில் 33 தொகுதிகளில் போட்டியிட்டு 8 இடங்களில் வெற்றி பெற்றது. பின்னர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது. 2024 லோக்சபா தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

ஓம் பிரகாஷ் ராஜ்பர் தலைமையிலான சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, 2022ல் சமாஜ்வாதி கூட்டணியில் 19 தொகுதிகளில் போட்டியிட்டு 6 இடங்களை வென்றது. தற்போது இந்த கட்சியும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்று, ராஜ்பர் யோகி அமைச்சரவையில் அமைச்சராக உள்ளார். நிஷாத் கட்சி 2022ல் பாஜக கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்டு 6 இடங்களை வென்றது. அப்னா தளம் (சோனேலால்) 17 தொகுதிகளில் போட்டியிட்டு 12 இடங்களில் வெற்றி பெற்றது. இரு கட்சிகளும் 2024 லோக்சபா தேர்தலிலும் பாஜக கூட்டணியில் இடம்பெற்றன.

மஜ்லீஸ்

இது தவிர மஜ்லீஸ் கட்சியும் களத்தில் இருக்கிறது. 2022-ல் 95 தொகுதிகளில் போட்டியிட்டும் ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. அந்தத் தேர்தலில் 0.49 சதவீத வாக்குகளை பெற்றது. அதேநேரம் இந்த முறை மஜ்லீஸ் கட்சி கூட்டணி கட்சியுடன் இணைந்தே களமிறங்கும் என தெரிகிறது.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இப்போது உத்தர பிரதேசத்தில் பாஜக கூட்டணி, சமாஜ்வாதி-காங்கிரஸ், பகுஜன் சமாஜ் என மும்முனை போட்டி ஏற்படவே வாய்ப்பு அதிகம். இதில் மாயவதியால் பெரிய பாதிப்பு ஏற்படாத நிலையில், பாஜக vs சமாஜ்வாதி என்பதே நேரடி போட்டியாக இருக்கும்.!

English summary

Political parties in Uttar Pradesh have started preparations for the 2027 Assembly election(உத்தர பிரதேசத்தில் தீவிரமடையும் தேர்தல் களம்): Uttar Pradesh Election latest news in tamil.

Read More

Previous Post

திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஞானசார தேரர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலை!  – Sri Lanka Tamil News

Next Post

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 21 ஆண்டுகள் நிறைவடையும் முன்பே பணத்தை எடுக்க முடியுமா? ரூல்ஸ் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Next Post
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 21 ஆண்டுகள் நிறைவடையும் முன்பே பணத்தை எடுக்க முடியுமா? ரூல்ஸ் என்ன? | வணிகம் போட்டோகேலரி

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 21 ஆண்டுகள் நிறைவடையும் முன்பே பணத்தை எடுக்க முடியுமா? ரூல்ஸ் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin