• Login
Saturday, October 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

உத்தரபிரதேசம்: தம்பதிக்கு கிடைத்த ரூ.12 லட்சம் வைரங்கள் … | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
October 3, 2026
in மலேசியா
Reading Time: 5 mins read
0
உத்தரபிரதேசம்: தம்பதிக்கு கிடைத்த ரூ.12 லட்சம் வைரங்கள் … | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பன்னா,மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தைச் சேர்ந்த வைரம் விளையும் பகுதியில், உத்தரபிரதேச தம்பதியினருக்கு ஒரே நாளில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள 4 வைரங்கள் கிடைத்துள்ளன. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலில் நஷ்டம்

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் ஸ்ரீவாஸ். இவரது மனைவி குட்டி தேவி. ராஜ்குமாருக்கு ஜான்சியில் தொழிலில் கடுமையான நஷ்டம் ஏற்பட்டதால், தம்பதியினர் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்தனர். இதையடுத்து, அவர்கள் மத்திய பிரதேசத்தில் உள்ள குட்டி தேவியின் தாய் வீட்டிற்கு இடம்பெயர்ந்தனர். சமூக ஊடகங்கள் மூலம் பன்னாவில் வைரம் தோண்டி எடுக்கும் தொழிலை பற்றி அறிந்த குட்டி தேவி, கணவரிடம் நாமும் ஏன் முயற்சி செய்யக்கூடாது என்று கூறியுள்ளார்.

2 நாட்களில் அதிர்ஷ்டம்

இதனைத் தொடர்ந்து, பன்னா வைர அலுவலகத்தில் முறையாக அனுமதி பெற்று, கிராமத்தில் உள்ள ஒரு சுரங்கப் பகுதியை அவர்கள் குத்தகைக்கு எடுத்தனர். கடந்த 6 மாதங்களாக தம்பதியினர் இருவரும் அந்த சுரங்கத்தில் கடுமையான உழைப்பைச் செலுத்தி வந்தனர். அவர்களது உழைப்பிற்கு பலனாக, கடந்த 2 நாட்களில் அடுத்தடுத்து 5.16 காரட் எடை கொண்ட 4 வைரங்கள் அவர்களுக்கு கிடைத்தன.

ரூ.12 லட்சம் மதிப்பு

சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு சுமார் ரூ.12 லட்சம் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட வைரங்கள் அனைத்தும் பன்னா மாவட்ட வைர அலுவலகத்தில் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த வைரங்கள் விரைவில் அரசின் அதிகாரப்பூர்வ ஏலத்தில் விற்பனைக்கு வைக்கப்படும்.

கடன் அடைக்க முடிவு

வைரம் கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கும் தம்பதியினர் கூறுகையில், “தொழில் நஷ்டத்தால் ஏற்பட்ட கடன்களை அடைக்க இந்தத் தொகை உதவும். மீதமுள்ள பணத்தை கொண்டு குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தை நல்வழியில் அமைப்போம். மீண்டும் எங்கள் சொந்த ஊரான ஜான்சிக்கே சென்று புதிய தொழிலை தொடங்குவோம்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்

Previous article“மது இல்லாத தமிழகம்” சவுமியா அன்புமணியின் புதிய இயக்கம் தொடக்கம்
Next article‘இன்ஸ்டாகிராம் பெண்களுக்கான செயலி’ – எலான் மஸ்க் தாக்கு …
tamiltamil



Read More

Previous Post

தங்கம் விலை 1.5 லட்சத்தைத் தொட்டது.. மக்கள் எடுத்த முக்கிய முடிவு.. நகை கடைக்காரர்களுக்கு இன்ப அதிர்ச்சி..! | Gold Touches ₹1.5 Lakh: Why Middle-Class Buyers Are Pivoting to Lightweight & 18K Jewellery

Next Post

காட்டு யானை தாக்குதல்: 15 வயது மாணவன் காயம் – Sri Lanka Tamil News

Next Post
காட்டு யானை தாக்குதல்: 15 வயது மாணவன் காயம் – Sri Lanka Tamil News

காட்டு யானை தாக்குதல்: 15 வயது மாணவன் காயம் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin