• Login
Friday, October 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

“ஒரே நாளில் 5 தங்கம், 11 பதக்கங்கள்!” – ஆசிய விளையாட்டில் 76 மெடல்களை அள்ளி இந்தியா வரலாற்று சாதனை | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 2, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
“ஒரே நாளில் 5 தங்கம், 11 பதக்கங்கள்!” – ஆசிய விளையாட்டில் 76 மெடல்களை அள்ளி இந்தியா வரலாற்று சாதனை | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 02, 2026 7:04 PM IST

வில்வித்தை, குத்துச்சண்டை, மல்யுத்தம் மற்றும் ஹாக்கி என அனைத்துக் களங்களிலும் இந்திய வீரர்கள் இன்று ஆதிக்கம் செலுத்தினர்.

News18
News18

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் 13-வது நாள் இந்திய விளையாட்டுத் துறைக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக அமைந்தது. இன்று நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் இந்தியா 5 தங்கம் உட்பட ஒரே நாளில் மொத்தம் 11 பதக்கங்களைக் வென்று அசத்தியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கை 76 ஆக (16 தங்கம், 25 வெள்ளி, 35 வெண்கலம்) உயர்ந்துள்ளது.

வில்வித்தை போட்டியின் ‘மகளிர் ரீகர்வ்’ பிரிவில், ஒலிம்பிக் சாம்பியனான தென்கொரிய அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி தனது முதல் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. மேலும், ரீகர்வ் கலப்பு ஜோடி பிரிவு மற்றும் ஆண்கள் ரீகர்வ் அணிகள் வெள்ளிப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தன.

குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகளும் வீரர்களும் அபார ஆதிக்கத்தைச் செலுத்தினர். மகளிருக்கான 75 கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டியில் லவ்லினா போர்கோஹைன் 5-0 என்ற கணக்கில் சீனாவின் பாவோ ஜியியை வீழ்த்தி தங்கம் வென்றார்.

மகளிருக்கான 65 கிலோ பிரிவில் பர்வீன் ஹூடாவும் தங்கம் வென்றார். ஒரே ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டு இந்திய பெண் குத்துச்சண்டை வீராங்கனைகள் தங்கம் வெல்வது இதுவே முதன்முறையாகும். இவர்களைத் தொடர்ந்து ஆண்களுக்கான 80 கிலோ பிரிவில் அன்குஷ் பங்காலும் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

மல்யுத்தப் போட்டியில் ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் சுஜீத் கல்கல் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார். படகோட்டப் போட்டியின் மகளிர் ‘டிங்கி’ பிரிவில் நெத்ரா குமணன் வெண்கலப் பதக்கம் வென்றார். செபக்டாக்ரா ஆண்களுக்கான குவாட்ரண்ட் பிரிவிலும் இந்தியா வெண்கலம் வென்றது.

13-வது நாளின் முக்கிய நிகழ்வாக, மகளிர் ஹாக்கி இறுதிப் போட்டியில் சீனாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி 44 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. வில்வித்தை, குத்துச்சண்டை, மல்யுத்தம் மற்றும் ஹாக்கி என அனைத்துக் களங்களிலும் இந்திய வீரர்கள் காட்டிய இந்த அபார ஆதிக்கம், ஆசிய விளையாட்டு வரலாற்றில் இந்தியாவின் முத்திரையைப் பதித்துள்ளது.

Read More

Previous Post

“வருகையில்லா பதிவு” மூலம் வெறும் ஒன்றரை மாதத்தில் 1 லட்சம் ஆவணங்கள் பதிவு.. தமிழக அரசு அசத்தல்! | Tamil Nadu’s Presenceless Registration Scheme Crosses 1 Lakh Registrations

Next Post

விதைத்த 22 நாளில் கீரை அறுவடை… சுழற்சி முறையில் அதிக மகசூல் பெறும் சூப்பர் டெக்னிக்

Next Post
விதைத்த 22 நாளில் கீரை அறுவடை… சுழற்சி முறையில் அதிக மகசூல் பெறும் சூப்பர் டெக்னிக்

விதைத்த 22 நாளில் கீரை அறுவடை... சுழற்சி முறையில் அதிக மகசூல் பெறும் சூப்பர் டெக்னிக்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin