• Login
Friday, October 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை: அக்டோபர் மாத தொடக்கமே செம.. அப்போ இந்த மாசமும் அது நடக்குமா? | Gold Price Today Tamil Nadu: Will Rates Fall in October too? Here is the prediction

GenevaTimes by GenevaTimes
October 1, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தங்கம் விலை: அக்டோபர் மாத தொடக்கமே செம.. அப்போ இந்த மாசமும் அது நடக்குமா? | Gold Price Today Tamil Nadu: Will Rates Fall in October too? Here is the prediction
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தங்கம் விலை: அக்டோபர் மாத தொடக்கமே செம.. அப்போ இந்த மாசமும் அது நடக்குமா?

அக்டோபர் மாதத்தில் முதல் நாளான இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. மாத தொடக்கமே நகை பிரியர்களுக்கு நல்ல நாளாக வந்துள்ளது. இதனால் இந்த மாதம் முழுவதுமே தங்கம் விலை இறங்குமுகமாகவே இருக்குமா என்ற கேள்வி எழுகிறது.

தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 30 ரூபாய் விலை குறைந்து 13,680 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 240 ரூபாய் விலை சரிந்துள்ளது. அந்த வகையில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,09,440 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை: அக்டோபர் மாத தொடக்கமே செம.. அப்போ இந்த மாசமும் அது நடக்குமா?

செப்டம்பர் மாதத்தில் தொடக்கத்தில் ஏற்ற இறக்கம் என தடுமாறிய தங்கம் விலை மாத இறுதியில் கணிசமாக விலை சரிந்தது. அந்த வகையில் செப்டம்பர் மாதத்தில் தங்கம் விலை கிராமுக்கு 675 ரூபாய் விலை சரிந்துள்ளது, அதே வேளையில் ஒரு சவரனுக்கு 5,400 ரூபாய் விலை குறைந்தது. அதாவது தங்கம் விலை 4.7% குறைந்தது. இந்த மாதமும் இப்படியே நீடிக்க வேண்டும் தொடர்ந்து தங்கம் விலை குறைய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

24 கேரட் தங்கம் விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 14,924 ரூபாய்க்கும் 10 கிராம் 1,49,240 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் 11,450 ரூபாய்க்கும் ஒரு சவரன் 91,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை இன்று மாறவில்லை. தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் வெள்ளி 240 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2.40 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் வெள்ளி விலை கிராமுக்கு 15 ரூபாயும் கிலோவுக்கு 15000 ரூபாயும் விலை சரிந்தது.

அக்டோபர் மாதம் தங்கம், வெள்ளி விலை என்ன ஆகும் என்பது தான் பலரது கேள்வி. தற்போதைக்கு அமெரிக்க மத்திய வங்கி மேலும் வட்டி விகிதத்தை உயர்த்தலாம் என்ற எதிர்பார்ப்பால் முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளி முதலீடுகளை கைவிட்டு பத்திரங்களில் முதலீடு செய்கின்றனர். இதனால் தான் தங்கம், வெள்ளி விலைகள் படிப்படியாக குறைந்து வருகின்றன.

அக்டோபர் மாதம் பொறுத்தவரை ஈரான் அமெரிக்கா போர் நிலவரம், அதனால் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் தாக்கம், அமெரிக்க டாலரின் மதிப்பு , அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகள் ஆகியவை தான் தங்கம் விலையை தீர்மானிக்கும். கடந்த ஆண்டில் அக்டோபர் மாதம் முதல் தான் தங்கம், வெள்ளி விலைகள் ராக்கெட் வேகத்தில் உயர தொடங்கின. ஆனால் இந்த ஆண்டு அதே போல ஒரு விலை ஏற்றம் இருக்காது என்றே சொல்லப்படுகிறது. இருந்தாலும் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கம், வெள்ளி விலைகள் லேசான விலை ஏற்றம் அடைய வாய்ப்புள்ளது என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

Gold Price Today Tamil Nadu: Will Rates Fall in October too? Here is the prediction

Tamil Nadu gold prices fell on October 1, with 22-carat gold dropping ₹30 per gram and ₹240 per sovereign. After a 4.7% decline in September, will gold prices continue to fall in October?/ தங்கம் விலை: அக்டோபர் மாத தொடக்கமே செம.. அப்போ இந்த மாசமும் அது நடக்குமா?

Story first published: Thursday, October 1, 2026, 10:32 [IST]

Other articles published on Oct 1, 2026

Read More

Previous Post

சென்னையில் ஆபீஸ் திறக்கும் ஆந்திரா.. ஒருபடி மேலே சென்ற உ.பி.. டிஆர்பி ராஜா பரபரப்பு பதிவு | Tamil Nadu’s investment competitiveness : AP to open an office in Chennai; UP goes a step further

Next Post

பிளை துபாய் பைலட் ஸ்மித் மச்சாருக்கு அரசு விருது: குஜராத் முதல் மந்திரி அறிவிப்பு | Makkal Osai

Next Post
பிளை துபாய் பைலட் ஸ்மித் மச்சாருக்கு அரசு விருது: குஜராத் முதல் மந்திரி அறிவிப்பு | Makkal Osai

பிளை துபாய் பைலட் ஸ்மித் மச்சாருக்கு அரசு விருது: குஜராத் முதல் மந்திரி அறிவிப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin