• Login
Friday, October 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சென்னையில் ஆபீஸ் திறக்கும் ஆந்திரா.. ஒருபடி மேலே சென்ற உ.பி.. டிஆர்பி ராஜா பரபரப்பு பதிவு | Tamil Nadu’s investment competitiveness : AP to open an office in Chennai; UP goes a step further

GenevaTimes by GenevaTimes
October 1, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
சென்னையில் ஆபீஸ் திறக்கும் ஆந்திரா.. ஒருபடி மேலே சென்ற உ.பி.. டிஆர்பி ராஜா பரபரப்பு பதிவு | Tamil Nadu’s investment competitiveness : AP to open an office in Chennai; UP goes a step further
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Business

oi-Velmurugan P

Time
Updated: Thursday, October 1, 2026, 18:49 [IST]

சென்னை: தமிழ்நாட்டின் முதலீட்டுப் போட்டித்தன்மை குறித்து அக்கறை உள்ள எவரையும் கவலைப்பட வைக்கும் செய்தி இது. முதலீட்டாளர்களுடனான பல ஆண்டுகால தொடர்புகள், துறை சார்ந்த அறிவு மற்றும் நிறுவன அனுபவம் கொண்ட ‘கைடன்ஸ் தமிழ்நாடு’ அமைப்பில் பயிற்சி பெற்ற முதலீட்டு வல்லுநர்களைத் தங்கள் பக்கம் இழுக்கப் போட்டி மாநிலங்கள் முயல்வதாக செய்திகள் வந்துள்ளது என்று திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியுள்ளார்.

முதலீட்டாளர்களையும் ஒப்பந்தக்காரர்களையும் கவர தமிழகத்திலேயே போட்டி மாநிலங்கள் முகாமிடுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்தியாவின் விருப்பத்திற்குரிய தொழிற்துறை மையங்களில் ஒன்றாகத் திகழும் தமிழ்நாட்டின் அந்தஸ்துக்கு, அதன் சொந்த மண்ணிலேயே சவால் ஏற்பட்டிருக்கிறது. பிற போட்டி மாநிலங்கள் சாத்தியமான முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், தமிழ்நாட்டின் முதன்மை முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான ‘கைடன்ஸ் தமிழ்நாடு’ அமைப்பில் பயிற்சி பெற்ற தொழில்முறை வல்லுநர்களைத் தங்கள் பக்கம் இழுப்பதற்காகவும் (poach) சென்னையில் அலுவலகங்களைத் திறந்து வருகின்றன.

Tamil Nadu s investment competitiveness AP to open an office in Chennai UP goes a step further

ஆந்திரப் பிரதேச மாநில முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான ‘ஆந்திரப் பிரதேஷ் பொருளாதார மேம்பாட்டு வாரியம்’ சென்னையில் ஒரு அலுவலகத்தை அமைப்பது குறித்து பரிசீலித்து வருகிறது. உத்தரப் பிரதேசத்தின் முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான ‘இன்வெஸ்ட் யுபி’, சமீபத்தில் சென்னையில் தனது அலுவலகத்தை அமைத்துள்ளது. ஹரியானா மாநிலமும் இதே வழியைப் பின்பற்றும் என்று மாநிலத் தொழில் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ‘இன்வெஸ்ட் யுபி’ அதிகாரி ஒருவர் பேசுகையில், மாநிலங்களுக்கு இடையேயான இந்த முதலீட்டுப் போட்டியை ஒரு “கடுமையான இரத்தக் களம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

முதல்வர் விஜய் பொய்யான தகவலை கூறியிருக்கிறார்.. டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

முதல்வர் விஜய் பொய்யான தகவலை கூறியிருக்கிறார்.. டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

‘கைடன்ஸ் தமிழ்நாடு’ அமைப்பு தனது ஊழியர்களுக்கான ஊதிய மாற்றத்திற்குத் தயாராகி வரும் நிலையில், போட்டி மாநிலங்களுடன் தொடர்புடைய அலுவலகங்களில் சேர மாட்டோம் என உறுதியளிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு ஊழியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த செய்தியை சுட்டிக்காட்டி முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், தமிழ்நாட்டின் முதலீட்டுப் போட்டித்தன்மை குறித்து அக்கறை உள்ள எவரையும் கவலைப்பட வைக்கும் செய்தி இது. முதலீட்டாளர்களுடனான பல ஆண்டுகால தொடர்புகள், துறை சார்ந்த அறிவு மற்றும் நிறுவன அனுபவம் கொண்ட ‘கைடன்ஸ் தமிழ்நாடு’ அமைப்பில் பயிற்சி பெற்ற முதலீட்டு வல்லுநர்களைத் தங்கள் பக்கம் இழுக்கப் போட்டி மாநிலங்கள் முயல்வதாக செய்திகள் வந்துள்ளது.

பிற மாநில முகமைகளுக்கு ஊழியர்கள் மாறுவதைக் கட்டுப்படுத்த ‘பான்ட்’ முறையைக் கொண்டுவரக் கைடன்ஸ் பரிசீலிக்கும் அளவிற்கு இந்த விவகாரம் தீவிரமாகி உள்ளது.

திமுக ஆட்சிக் காலத்தில், கைடன்ஸ் அமைப்பில் மிகவும் வலிமையான மற்றும் மிகச் சிறந்த தொழில்முறை வல்லுநர்கள் கொண்ட குழுவை நாங்கள் உருவாக்கினோம். பிணைப்பத்திரங்களைக் கொண்டு மட்டும் திறமையாளர்களைத் தக்கவைத்துவிட முடியாது. அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கி, அதிகாரமளித்து, அவர்களை மதிப்பதன் மூலமே திறமைகளைத் தக்கவைக்க முடியும்.

ஒரு லட்சம் டூ 10 லட்சம்... தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸில் முதலீடு செய்தால் இவ்வளவு லாபமா? விவரம்

ஒரு லட்சம் டூ 10 லட்சம்… தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸில் முதலீடு செய்தால் இவ்வளவு லாபமா? விவரம்

போட்டி மாநிலங்கள் இப்போது சென்னையிலேயே தங்கள் அலுவலகங்களை அமைத்து வரும் நிலையில், ‘கைடன்ஸ் தமிழ்நாடு’ குழுவைப் பாதுகாத்து அவர்களுக்குத் தேவையான அதிகாரங்களை தவெக அரசு வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டின் மீது மிகுந்த பற்றும், சர்வதேச முன்னணி நிறுவனங்களுடன் பணியாற்றிய அனுபவமும், பல ஆண்டுகால நிறுவன அறிவும் கொண்ட சில விதிவிலக்கான இளம் வல்லுநர்கள் அங்கு உள்ளனர். அவர்களுக்குத் தகுதியான சுதந்திரம், அங்கீகாரம் மற்றும் மரியாதையைக் கொடுங்கள்.
ஏனெனில், நல்ல மனிதர்களை நீங்கள் இழக்கும்போது, திறமையை மட்டும் இழப்பதில்லை; அவர்கள் இத்தனை ஆண்டுகளாகக் கட்டியெழுப்பிய தொடர்புகளையும் முதலீட்டு வாய்ப்புகளையும் சேர்த்து இழக்கும் அபாயத்தை எதிர்கொள்கிறீர்கள்!” இவ்வாறு கூறியுள்ளார்

English summary

This is news that would worry anyone concerned about Tamil Nadu’s investment competitiveness. Former DMK Minister TRB Rajaa has stated that there are reports of competing states attempting to poach investment professionals trained at ‘Guidance Tamil Nadu’—experts who possess years of experience in investor relations, sector-specific knowledge, and institutional expertise.

Read More

Previous Post

கோட்டாவின் ரிட்மனு தள்ளுபடி

Next Post

தங்கம் விலை: அக்டோபர் மாத தொடக்கமே செம.. அப்போ இந்த மாசமும் அது நடக்குமா? | Gold Price Today Tamil Nadu: Will Rates Fall in October too? Here is the prediction

Next Post
தங்கம் விலை: அக்டோபர் மாத தொடக்கமே செம.. அப்போ இந்த மாசமும் அது நடக்குமா? | Gold Price Today Tamil Nadu: Will Rates Fall in October too? Here is the prediction

தங்கம் விலை: அக்டோபர் மாத தொடக்கமே செம.. அப்போ இந்த மாசமும் அது நடக்குமா? | Gold Price Today Tamil Nadu: Will Rates Fall in October too? Here is the prediction

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin