கூட்டு வங்கிக் கணக்கைத் தொடங்குவதன் மூலம் வருமானத்தை எவ்வாறு அதிகரிப்பது? உங்கள் மனைவியுடன் இணைந்து ஒரு கூட்டு வங்கிக் கணக்கைத் தொடங்கி, முதலீட்டுத் தொகையை அதிகரிப்பதன் மூலம் உங்கள் மாத வருமானத்தை கணிசமாக உயர்த்த முடியும். உதாரணமாக, கணவர் தனது சேமிப்பிலிருந்து 7,00,000 ரூபாயையும், மனைவி தனது சொந்த சேமிப்பிலிருந்து 7,00,000 ரூபாயையும் முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். அப்போது இருவரின் மொத்த முதலீட்டுத் தொகையும் 14,00,000 ரூபாயாக இருக்கும். தற்போதுள்ள 7.4 சதவீத வட்டி விகிதத்தின்படி, இந்தத் தொகைக்கு ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் சுமார் 25,899 ரூபாய் வட்டியாகக் கிடைக்கும்.

